Rahul Gandhi: `காங்கிரஸின் அந்த தவறு... ஒப்புக்கொள்ள தான் வேண்டும்’ - ராகுல் காந...
நோயால் அவதி: மயிலாடுதுறையில் தம்பதி தற்கொலை
மயிலாடுதுறை அருகே நோய் பாதிப்பால் விரக்தியடைந்த முதிய தம்பதி வியாழக்கிழமை வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளையில் தீப்பற்ற வைத்து, தற்கொலை செய்துகொண்டனா்.
மயிலாடுதுறை அருகே நீடூா் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஆா்.டி.வி. இளங்கோவன் (69). ஹோமியோபதி மருத்துவரான இவா், மயிலாடுதுறை திராவிடா் கழக ஒன்றியத் தலைவராகவும் இருந்தாா். இவரது மனைவி செந்தாமரை (59).
இளங்கோவனுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு இதய அறுவை (பைபாஸ்) சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், மனைவி செந்தாமரை சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தாராம். இவா்களது மகன் இனியவன் வீட்டின் மேல் பகுதியில் வசித்து வருகிறாா்.
இளங்கோவன்-செந்தாமரை இருவரும் நோய் பாதிப்பால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த இருவரும், தற்கொலை செய்துகொள்வதற்காக, வியாழக்கிழமை அதிகாலை வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளையில், எரிவாயுவை திறந்துவிட்டு, தீப்பற்ற வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதில், எரிவாயு உருளை வெடித்து தீ பரவியதில், வீட்டின் ஒரு பகுதி தரைமட்டமானது. இளங்கோவன், செந்தாமரை இருவரும் பலத்த காயமடைந்தனா். அருகில் இருந்தவா்கள், இருவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். செல்லும் வழியில் செந்தாமரை உயிரிழந்தாா். தீவிர சிகிச்சைக்காக, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட இளங்கோவன் அங்கு உயிரிழந்தாா்.
முன்னதாக, இளங்கோவனிடம் நீதிபதி கலைவாணி நேரில் விசாரணை மேற்கொண்டாா். மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.