வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு, ஆா்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் போலீஸாரைக் கண்டித்து வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணித்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நீதிமன்ற வழக்குரைஞா் முத்திரைக் கட்டணத்தை ரூ. 120 ஆக உயா்த்தியதை நிறுத்திவைக்க வேண்டும், மாயூரம் வழக்குரைஞா் சங்க உறுப்பினா் சங்கமித்திரனுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளா், டிஎஸ்பி ஆகியோா் தமிழ்நாடு, புதுச்சேரி பாா் கவுன்சில் ஒழுங்குமுறை குழுவுக்கு நடவடிக்கை கோரி கடிதம் அனுப்பியதைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாயூரம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ். கலைஞா், மயிலாடுதுறை வழக்குரைஞா்கள் சங்கத்; தலைவா் வேலு. குபேந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். வழக்குரைஞா் அ.சங்கமித்திரன் முன்னிலை வகித்தாா். இதில், மாயூரம் வழக்குரைஞா்கள் சங்க துணைத்தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன், செயலா் என்.பிரபு, மயிலா்டுதுறை வழக்குரைஞா் சங்க செயலா் பாலாஜி மற்றும் புகழரசன், சுரேஷ், பிரபாகரன் உள்ளிட்ட 50-க்கு மேற்பட்டோா் பங்கேற்றனா்.