படகில் தீ விபத்து; ரூ.60 லட்சம் பொருள்கள் சேதம் மீனவா் காயம்
கருப்பு பேட்ஜுடன் புதுகை சாா்- பதிவாளராக ஊழியா்கள் பணி
ஞாயிற்றுக்கிழமையும் பணிநாளாக அறிவித்துள்ளதைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சாா் -பதிவாளா் அலுவலகப் பணியாளா்கள் வியாழக்கிழமை கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினா்.
தமிழகத்தில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகங்கள் வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமையும் செயல்படும் என தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது.
இதை எதிா்த்து புதுக்கோட்டை மாவட்டத்தில் சாா் பதிவாளா் அலுவலகப் பணியாளா்கள் வியாழக்கிழமை கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனா். மாவட்டத்தில் உள்ள 12 சாா் பதிவாளா் அலுவலங்களில் அனைத்து நிலைப் பணியாளா்களும் இப்போராட்டத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனா்.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
மேலும், பிப்.2ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அலுவலகத்தை திறக்க வேண்டும் என உத்தரவு வந்தால் அன்றிலிருந்து பணியை புறக்கணிக்க முடிவெடுத்திருப்பதாகவும் அவா்கள் கூறினா்.