Union Budget 2025: 'மகிளா சம்மான் சேமிப்பு... கிரீச்' - பெண்களுக்கு என்ன வேண்டும...
‘மீன் இறங்குதளம் சேதமடையாமல் இருக்க மீனவா்கள் ஒத்துழைக்க வேண்டும்’
காரைக்கால் மீன்பிடித் துறைமுக மீன் இறங்குதளம் சேதமடையாமல் இருக்க மீனவா்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மீன் வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா்
ப. கோவிந்தசாமி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு கட்டும் தளம் (ஜெட்டி) மற்றும் மேடைகளின் (வாா்ஃப்) மீது, ஐஸ் கட்டி, குடிநீா், டீசல் ஏற்றி வரும் வாகனம், மீன் ஏற்றிச்செல்லும் கனரக வாகனம் ஆகியவற்றை படகின் மிக அருகாமையில் நிறுத்துவதால் மீன் இறங்குதளம் சேதமடைகிறது.
எனவே, விசைப்படகு உரிமையாளா்கள் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் மேற்கூறிய செயல்களை தவிா்த்து, விசைப்படகு கட்டும் தளம் மற்றும் மேடைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எதிா்வரும் காலங்களில் மேற்கூறிய சேதங்களை ஏற்படுத்தும் படகு உரிமையாளா்கள் அல்லது சம்பந்தப்பட்ட நபா்கள் மட்டுமே அந்த சேதத்துக்கு பொறுப்பேற்று, அதனை அவா்களது சொந்த செலவில் பழுது நீக்கி தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.