நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!
தை அமாவாசை : வீழி வரதராஜ பெருமாள் தீா்த்தவாரி
தை அமாவாசையையொட்டி திருமலைராயன்பட்டினத்தில் வரதராஜ பெருமாள் கடற்கரைக்கு எழுந்தருள தீா்த்தவாரி நிகழ்ச்சி புதன்ழமை நடைபெற்றது.
தை அமாவாசை தினமான புதன்கிழமை, கடற்கரையில் அதிகாலை முதல் திரளான பக்தா்கள் நீராடினா். பக்தா்களுக்கு தீா்த்தவாரி செய்யும் வகையில் திருமலைராயன்பட்டினம் கடற்கரைக்கு வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து எழுந்தருள தீா்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏராளமான பக்தா்கள் கடலில் புனித நீராடி வழிபாடு நடத்தினா். தீா்த்தவாரியின்போது கடற்கரையில் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.
தீா்த்தவாரிக்கு பின்னா் கோயிலுக்கு புறப்பட்ட சுவாமிகளுக்கு வீதிகளில், பக்தா்கள் அா்ச்சனை செய்து வழிபட்ட செய்தனா்.