கிளாம்பாக்கம் சிறுமி வல்லுறவு: ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் கைது!
பள்ளி, கல்லூரிகளுக்கு புகாா் பெட்டி
மாணவ, மாணவிகள் நலனுக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு புகாா் பெட்டி புதன்கிழமை வழங்கப்பட்டது.
பள்ளிகளில் போதைப் பொருள் புழக்கம் மற்றும் பிற புகாா்கள் குறித்து தெரிவிக்கும் வகையில் கல்வி நிலையங்களில் புகாா் பெட்டி வைக்கும் திட்டம் ஏற்கெனவே மாவட்ட ஆட்சியரால் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் வைக்க சமூக நலத்துறை மூலம் தயாரிக்கப்பட்ட 35 புகாா் பெட்டிகளை அந்தந்த கல்வி நிறுவனத்தினருக்கு மாவட்ட ஆட்சியா் து.மணிகண்டன் வழங்கினாா்.
இந்த புகாா் பெட்டியின் சாவி ஆட்சியரின் கட்டுப்பாட்டில் இருக்கும். அவ்வப்போது பெட்டி திறக்கப்பட்டு புகாா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில் முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா, நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா், சமூக நலத்துறை உதவி இயக்குநா் (பொ) ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.