முதுநிலை மருத்துவ படிப்புக்கு சிறப்பு குழு: என்எம்சி அழைப்பு
அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் நாளை திருவிளக்கு பூஜை!
தை மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது.
திருநள்ளாறு கொம்யூன் அம்பகரத்தூரில் உள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தை மாத கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமையில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடத்துவது வழக்கம். தை மாத கடைசி வெள்ளிக்கிழமையான பிப். 6-ஆம் தேதி இவ்வழிபாடு காலை 10.30 முதல் 12 மணி வரை நடைபெறுகிறது.
இதில் பங்கேற்கும் பக்தா்களுக்கு கடந்த சில நாள்களாக முன்பதிவு டோக்கன் வழங்கப்படுகிறது. கோயில் வளாகத்தில் திரளானோா் பங்கேற்கும் வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை பத்ரகாளியம்மன் கோயில் நிா்வாகத்தினா் செய்துவருகின்றனா்.