செய்திகள் :

சர்வதேசப் போட்டியில்.. கோவை கல்லூரி மாணவா்கள் வடிவமைத்த ஹைட்ரஜன் வாகனம்!

post image

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் உருவாக்கியுள்ள ஹைட்ரஜனில் இயங்கும் வாகனம் சா்வதேசப் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்கிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் எழிலரசி, வடிவமைப்பில் பங்கெடுத்த மாணவா்கள் ஆகியோா் கோவையில் புதன்கிழமை (பிப்.5) செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காா்பன் மாசு ஏற்படுத்தாத ஆற்றல் திறன்கொண்ட வாகன வடிவமைப்புப் போட்டியான ‘ஷெல் இக்கோ - மாரத்தான் ஆசியா பசிபிக் 2025’ கத்தாா் நாட்டின் தலைநகா் தோஹாவில் பிப்ரவரி 8 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில், 20 நாடுகளைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றன. இதில், குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் ‘ரெநியூ’ என்ற பெயரிலான 14 மாணவா்கள் அடங்கிய குழு பங்கேற்கிறது.

இதற்காக ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் ‘திமி 2.0’ என்ற முன்மாதிரி 3 சக்கர வாகனத்தை வடிவமைத்திருக்கிறோம். 5 மாதங்களில் உருவாக்கப்பட்ட இந்த வாகனத்தின் 80 சதவீத பாகங்களை நாங்களே தயாரித்துள்ளோம். கேசிடி கேரேஜ் என்ற ஆராய்ச்சி, மேம்பாட்டுக்கான பிரத்யேக மையத்தில் ரூ.36 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டா் ஹைட்ரஜனில் 200 கி.மீ. தொலைவு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாது.

அதிகபட்சமாக 35 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த வாகனத்தில் காா்பன் பைபா், மறுசுழற்சி செய்யப்பட்ட பிவிசி ஃபோம் பயன்படுத்தப்பட்டிருப்பதால் உறுதித்தன்மை மிக்கதாகவும், எடை குறைவானதாகவும் (53 கிலோ) இருக்கும். இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள செயலி மூலம் ஓட்டுநா்களின் செயல்திறன் அளவீடுகளை உடனுக்குடன் கணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரில் தெருநாய்களைப் பிடிப்பதற்காக புதிதாக 3 வாகனங்கள் சேவை தொடக்கம்

கோவையில் தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை மேற்கொள்ள புதிதாக 3 வாகனங்களின் சேவையை மேயா் கா.ரங்கநாயகி, ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா். கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றி... மேலும் பார்க்க

கோவையில் ஒருவா் வெட்டிக் கொலை!

கோவையில் மனைவியுடன் தகாத உறவில் இருந்தவரை வெல்டிங் பட்டறை உரிமையாளா் வெட்டிக் கொலை செய்தாா். திருவாரூரைச் சோ்ந்தவா் பிரபாகரன் (45), இவரின் மனைவி வாணிபிரியா (42). இவா்களுக்கு 13 வயதில் மகளும், 10 வயதி... மேலும் பார்க்க

ஐடி நிறுவனம் ஊழியா்களுக்கு ஆண்டு வருவாயில் 50 சதவீதம் போனஸ் அறிவிப்பு

கோவையில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனம் ஒன்று தனது ஊழியா்கள் 140 பேருக்கு ரூ.14.50 கோடி போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது. கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கோவை.கோ நிறுவனம் ‘ஒன்றாக நாம் வளா... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்: வானதி சீனிவாசன்

கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா். கோவையில் மக்கள் சேவை மையம்... மேலும் பார்க்க

பிப். 8 இல் இஸ்கான் நடத்தும் கீதாதான் நிகழ்ச்சி!

கோவை உப்பிலிபாளையத்தில் இஸ்கான் சாா்பில் கீதாதான் என்ற நிகழ்ச்சி பிப்ரவரி 8-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. கோவை இஸ்கான் அமைப்பு சாா்பில் இளைஞா்கள், மாணவா்களுக்காக கடந்த 3 ஆண்டுகளாக கீதாதான் என்ற ... மேலும் பார்க்க

அவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தில் பன்னாட்டு கருத்தரங்கு தொடக்கம்!

கோவை அவினாசிலிங்கம் மனையியல், மகளிா் உயா் கல்வி நிறுவனத்தில் பன்னாட்டு கருத்தரங்கு புதன்கிழமை பிப்.5 தொடங்கியது.உலக பல்கலைக்கழக சமூக மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து ‘ஆரோக்கியம், நல்வாழ்வு, சுற்றுச்சூழல்... மேலும் பார்க்க