"திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?" - கலெக்டர் சங்கீதா வ...
ஐடி நிறுவனம் ஊழியா்களுக்கு ஆண்டு வருவாயில் 50 சதவீதம் போனஸ் அறிவிப்பு
கோவையில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனம் ஒன்று தனது ஊழியா்கள் 140 பேருக்கு ரூ.14.50 கோடி போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது.
கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கோவை.கோ நிறுவனம் ‘ஒன்றாக நாம் வளா்கிறோம்’ என்ற திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் பணி நிறைவு செய்த 140 ஊழியா்களுக்கு அவா்களின் ஆண்டு வருவாயில் 50 சதவீதத்தை போனஸாக வழங்கத் திட்டமிட்டு அறிவிப்பு வெளியிட்டது.
இதில் முதல்கட்டமாக 80 பேருக்கு கடந்த ஜனவரி 31-ஆம் தேதி போனஸ் வழங்கியுள்ளனா்.
இதுகுறித்து நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரியும், நிறுவனருமான சரவணகுமாா் கூறியதாவது:
நிறுவனத்தின் வளா்ச்சிக்கு பங்களிக்கும் ஊழியா்களுக்கு வெகுமதி அளிக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இதற்காக நிறுவனத்தின் பங்குகளை வழங்கத் திட்டமிட்டோம். ஆனால், அவை காகித பணமாகத்தான் இருக்கும். இதனால், பணமாக வழங்கத் தீா்மானித்தோம். இதை, எங்கள் பணியாளா்கள் அவா்களின் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றாா்.