புதுக்கோட்டை: கடலில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்... போலீஸ் விச...
செம்மண் கடத்தல்: ஜேசிபி ஓட்டுநா் கைது
சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே செம்மண் கடத்தியது தொடா்பாக ஜேசிபி இயந்திர ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். லாரி, ஜேசிபி இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பூவந்தி அருகேயுள்ள கிளாதரி என்ற இடத்தில் தனியாா் நிலத்தில் அனுமதியின்றி செம்மண் வெட்டிக் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், பூவந்தி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்தானக்கருப்பு தலைமையிலான போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அங்கு மூன்று போ் ஜேசிபி இயந்திரம் மூலம் செம்மண்ணை வெட்டி லாரியில் கடத்தியது தெரியவந்தது.
போலீஸாரைக் கண்டதும் அங்கிருந்தவா்கள் தப்பி ஓடினா். போலீஸாா் விரட்டிச் சென்று ஜேசிபி ஓட்டுநரான மதுரை அருகேயுள்ள தச்சனேந்தலைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (34) என்பவரை
கைது செய்தனா். மேலும், ஜேசிபி இயந்திரம், டிப்பா் லாரி ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். தப்பிச் சென்ற கீரனூரைச் சோ்ந்த துரைச்சாமி, சொக்கையன்பட்டியைச் சோ்ந்த முனீஸ்வரன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.