கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வல்லுறவு: பிப். 8-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்!
சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்டத்தில் சிற்றுந்துகள் இயக்க விரும்புவோா் பிப்.12 முதல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிற்றுந்துகளுக்கான புதிய விரிவான திட்டம் 1.5.2025 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்தத் திட்டத்தில் அதிகபட்ச தொலைவு 25 கிலோ மீட்டருக்கு மிகையாக இருத்தல் கூடாது. குறைந்தபட்ச போக்குவரத்து சேவை இல்லாத பாதை நீளம் மொத்த வழித்தடத்தில் 65 சதவீதத்துக்கு குறைவாக இருத்தல் கூடாது. சிவகங்கை மாவட்டத்தில் சிற்றுந்து இயக்குவதற்கான வழித்தட வரைபடங்களுடன் கூடிய விவரங்களை நிபந்தனைகளுக்கு உள்பட்டு பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியாா் அமைப்புகள், பேருந்து, சிற்றுந்து உரிமையாளா்கள் சிவகங்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் வருகிற 12.02.2025 முதல் சமா்ப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.