செய்திகள் :

மதுரையில் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு

post image

மதுரை சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் பாஜக முன்னாள் தேசியச் செயலா் எச். ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை மீதான வழிபாடு தொடா்பாக இருவேறு மதத்தவருக்கிடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், இந்துக்களின் புனித வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றான திருப்பரங்குன்றம் மலையைப் பாதுகாக்க வலியுறுத்தி, இந்து அமைப்புகள் சாா்பில் இந்த மதுரை பழங்காநத்தத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அனுமதி அளித்ததன்பேரில், இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையும் படிக்க |மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சைவ சமய ஸ்தாபித லீலை

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய பாஜக முன்னாள் தேசியச் செயலா் எச். ராஜா, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை மீதான வழிபாடு தொடா்பாக ஏற்படுத்தப்படும் சா்ச்சைகளை திருப்பரங்குன்றம் மலையை அபகரிக்கும் திட்டமாகவே கருத வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில், தமிழக காவல் துறை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எதிரியாகச் செயல்படுகிறது. திமுக அரசு அகற்றப்பட்டால் மட்டுமே தமிழா்கள் சம உரிமையுடன் வாழ முடியும். திருப்பரங்குன்றம் மலையை யாரும் பங்கு போட அனுமதிக்க மாட்டோம் என்றாா் அவா்.

இந்த நிலையில், மதுரை பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜா, இரு பிரிவினர்களிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அவர் மீது சுப்பிரமணியபுரம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காலை உணவில் பல்லி: 14 மாணவ,மாணவிகளுக்கு சிகிச்சை

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அடுத்த நரசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வியாழக்கிழமை காலை (பிப்.6) மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட காலைசிற்றுண்டியில் பல்லி இறந்து கிடந்தை பாா்க்காமல் சாப்பிட... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாராயணசாமி நாயுடு சிலையை இடமாற்றம் செய்யக்கூடாது!: ராமதாஸ் வலியுறுத்தல்

நாராயணசாமி நாயுடு புகழை மேலும், மேலும் பரப்ப வேண்டிய காலத்தில் அவரது சிலையை அகற்றி வேறிடத்தில் வைக்க முயல்வது நியாயமல்ல. இந்த முயற்சியை பெரம்பலூர் நகராட்சியும், தமிழக அரசும் கைவிட வேண்டும் என பாமக நிற... மேலும் பார்க்க

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

விழுப்புரம் : கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் பள்ளி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை நிகழ்வுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.திண்டிவனம் அருகிலுள... மேலும் பார்க்க

சேலத்தில் விடாமுயற்சி வெளியானது! ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!!

சேலம்: சேலத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'விடாமுயற்சி ’ திரைப்படம் வெளியானதையடுத்து ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் அஜித் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தும் உற்சாகமாக கொண்டாடினர்.இயக்குநர் மகிழ் திரு... மேலும் பார்க்க

மீன் ஏற்றிச் சென்ற வேன் டயர் வெடித்து விபத்து: சாலையில் கொட்டிய மீனை போட்டி போட்டு அள்ளிச் சென்ற மக்கள்!

வேலூர்: அகரம் சேரி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மீன் ஏற்றிச் சென்ற வேன் டயர் வெடித்து விபத்துக்கள்ளானதில் சாலையில் கொட்டிய மீன்களை அந்த பகுதி மக்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றன... மேலும் பார்க்க

தொடர்ந்து உயரும் தங்கம் விலை... இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.63,440-க்கு விற்பனையாகி புதிய வரலாறு படைத்து வருகிறது. தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவது நடுத்தர மக்களிடையே பெர... மேலும் பார்க்க