செய்திகள் :

Gaza: ``காஸாவை சொந்தமாக்க ட்ரம்ப் திட்டம்; ஆபத்தானவை..'' -கொந்தளிக்கும் உலக நாடுகள்! காரணம் என்ன?

post image

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில், கடந்த செவ்வாய்கிழமை நெதன்யாகுவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் வெள்ளை மாளிகையில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய அதிபர் ட்ரம்ப், ``நான் இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்ற நிலையில், என்னை சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவர் நெதன்யாகுதான். அதற்காக நன்றி. பைடன், ஆட்சியிலிருந்த நான்கு ஆண்டுகளில் இஸ்ரேலின் எதிரிகள் மிகவும் வலுவாக வளர்வதற்கு அனுமதித்துவிட்டார். அமெரிக்கா - இஸ்ரேலுக்கு இடையிலான பிணைப்பைத் யாராலும் தகர்க்க முடியாது. எந்த மாற்று வழிகளும் இல்லை என்பதால்தான், பாலத்தீனர்கள் மீண்டும் காஸாவுக்கு செல்கிறார்கள். காஸா அழிவின்தளம்.

ட்ரம்ப்

எனவே காஸாவில் வாழும் சுமார் 18 லட்சம் மக்கள், மற்ற அரபு நாடுகளுக்கு இடம்பெயர வேண்டும். அப்போதுதன் காஸா முனையை அமெரிக்கா கையிலெடுத்து, அங்கு தேவையான பணிகளை மேற்கொள்ள முடியும். அந்த நிலத்தைச் சொந்தமாக்கி, மேம்படுத்தி, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அது மிகவும் அற்புதமானதாக இருக்கும். அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் காஸாவில், பாலத்தீனர்கள் உள்பட உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் வாழ்வார்கள்" என்றார்.

இவரின் கருத்து உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழத்தியிருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு நாடுகள் கடும் கண்டனங்களை எழுப்பியிருக்கின்றன.

ஹமாஸின் மூத்த அதிகாரி சமி அபு ஜுஹ்ரி:

காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களை இன ரீதியாக சுத்திகரிக்க வேண்டும். காஸாவைக் கட்டுப்படுத்தும் விருப்பம் குறித்த ட்ரம்பின் கருத்துக்கள் அபத்தமானவை மற்றும் ஆபத்தானவை. இதுபோன்ற யோசனைகள் நாட்டை தீக்கிரையாக்கும். எனவே, காஸா மக்கள் அத்தகைய திட்டங்களை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டார்கள் என்பதால், இது மீண்டும் குழப்பத்தையும் பதற்றத்தையும் உருவாக்குவதற்கான செய்முறையாக நாங்கள் கருதுகிறோம்.

ட்ரம்ப் - நெதன்யாகு

பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ்:

பல ஆண்டுகளாகப் போராடி பெரும் தியாகங்களைச் செய்து பெற்ற எங்கள் மக்களின் உரிமைகளை மீறுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதுபோன்ற பேச்சுகள் சர்வதேச சட்டத்தின் கடுமையான விதிமீறலைக் குறிக்கின்றன.

பாலஸ்தீனத்தின் ஐ.நா. தூதர் ரியாத் மன்சூர்:

பாலஸ்தீன மக்களை ஒரு ‘நல்ல இடத்திற்கு’ அனுப்ப விரும்புவோர், அவர்களின் சொந்த நிலமான இப்போது இஸ்ரேலில் உள்ள அவர்களின் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்க வேண்டும். பாலஸ்தீன மக்கள் காஸாவை மீண்டும் கட்டமைக்க விரும்புகிறார்கள், ஏனென்றால் நாங்கள் இங்குதான் வழ்ந்தோம்.

இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர்:

காஸாவிலிருந்து மக்களை இடம்பெயர ஊக்குவிப்பது மட்டுமே மிகச் சரியான யோசனை.

எகிப்து வெளியுறவு அமைச்சர் பத்ர் அப்தெலட்டி:

பாலஸ்தீன பிரதமர் முகமது முஸ்தபாவுடன் ட்ரம்பின் திட்டம் குறித்து விவாதித்தோம். பாலஸ்தீனியர்களை அந்தப் பகுதியைவிட்டு வெளியேற்றாமல் காஸாவில் மீட்புப் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

நெதன்யாகு

சவுதி அரேபியா வெளியுறவு அமைச்சகம்:

பாலஸ்தீனியர்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றுவதற்கான எந்தவொரு முயற்சியையும் தீவிரமாக நிராகரிக்கிறோம். இது சவுதி அரேபியாவின் தெளிவான மற்றும் வெளிப்படையான முடிவு. இந்த முடிவு பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல. எனவே, இஸ்ரேலிய குடியேற்றக் கொள்கைகள், பாலஸ்தீன நிலங்களை இணைப்பது அல்லது பாலஸ்தீன மக்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றும் முயற்சிகள் மூலம், பாலஸ்தீன மக்களின் சட்டபூர்வமான உரிமைகள் மீதான எந்தவொரு மீறலையும் சவுதி அரேபியா கடுமையாக எதிர்க்கும்.

ஜோர்டான் அரச நீதிமன்றம்:

இஸ்ரேலிய குடியேற்ற விரிவாக்கத்தை நிறுத்த வேண்டியதன் அவசியத்தை மன்னர் இரண்டாம் அப்துல்லா வலியுறுத்துகிறார், பாலஸ்தீனியர்களை நிலத்தை ஆக்கிரமிக்கும் எந்தவொரு முயற்சியையும் நிராகரிக்கிறோம்.

ஈரான்:

"பாலஸ்தீனியர்களை அவர்களின் நாட்டை விட்டு வெளியேற்றும் எந்தவொரு திட்டத்துக்கும் ஈரான் உடன்படாது. இதைப் பல்வேறு வழிகள் மூலம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க செனட்டர், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வான் ஹோலன் கிறிஸ்வான் ஹோலன்:

“காஸாவிலிருந்து இரண்டு மில்லியன் பாலஸ்தீனியர்களை வெளியேற்றி, தேவைப்பட்டால், வலுக்கட்டாயமாக அவர்களின் உரிமையை கைப்பற்றுவதற்கான ட்ரம்பின் திட்டம், வேறு பெயரில் கூறுவதானால் அது இன அழிப்பு. காங்கிரஸ் இந்த ஆபத்தான, பொறுப்பற்ற திட்டத்தை எதிர்த்து நிற்க வேண்டும்.

ட்ரம்ப் - நெதன்யாகு

ரஷ்யா வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்:

“ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை முழுமையாகக் கட்டுப்படுத்த இஸ்ரேலியர்கள் திட்டமிட்டுள்ளனர். பாலஸ்தீனியர்களை காஸா பகுதியிலிருந்து வெளியேற்ற முயற்சிக்கின்றனர். கூட்டு தண்டனைக் கொள்கை முறை என்பது ரஷ்யா நிராகரிக்கும் ஒரு முறையாகும். மத்திய கிழக்கின் இரு நாடுகளுக்கு மத்தியில் ஏற்பட்டிருக்கும் இந்தப் பிரச்சனை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தில் இருக்கும் தீர்வின் அடிப்படையில் மட்டுமே சாத்தியமாகும்.

சீனா வெளியுறவு அமைச்சகம்:

காஸா மக்களை கட்டாயமாக இடமாற்றம் செய்யும் இந்த ஆலோசனையை சீனா கடுமையாக எதிர்க்கிறது. போர்நிறுத்தம், மோதலுக்குப் பிந்தைய நிர்வாகம் என்றப் பாலஸ்தீனப் பிரச்னையை இரு அரசு தீர்வின் அடிப்படையில் மட்டுமே தீர்க்க முடியும் என்று நம்புகிறோம்.

துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான்:

ட்ரம்பின் கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. பாலஸ்தீனியர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்துவது மேலும் மோதலுக்குதான் வழிவகுக்கும். பாலஸ்தீனியர்களைக் கொலை செய்யும் இஸ்ரேலின் போக்கு மாறினால், துருக்கி இஸ்ரேலுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளை - வர்த்தகத்தைத் துண்டித்தல், அதன் தூதரை திரும்பப் பெறுதல் - மறுபரிசீலனை செய்யும்.

ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக்:

காஸா பகுதி பாலஸ்தீன மக்களுக்குச் சொந்தமானது. அவர்கள் வெளியேற்றப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சர்வதேச சட்டத்திற்கு முரணானது. இது புதிய துன்பங்களுக்கும் புதிய வெறுப்புக்கும் வழிவகுக்கும். பாலஸ்தீனம் குறித்து முடிவெடுக்க அந்த நாட்டு மக்களுக்கே முழு உரிமை இருக்கிறது.

நெதன்யாகு - ட்ரம்ப் - எலான் மஸ்க்

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டோஃப் லெமோயின்:

“காஸாவின் பாலஸ்தீன மக்களை கட்டாயமாக இடம்பெயரச் செய்வதற்கு பிரான்ஸ் தனது எதிர்ப்பை மீண்டும் பதிவு செய்து வலியுறுத்துகிறது. இது கடுமையான சர்வதேச சட்ட மீறலாகவும், பாலஸ்தீனியர்களின் நியாயமான தேவைகள் மீதான தாக்குதலாகவும், இரு-அரசு தீர்வுக்கு ஒரு பெரிய தடையாகவும் அமையும். காஸாவின் எதிர்காலம் எதிர்கால பாலஸ்தீன அரசின் கையில்தான் இருக்க வேண்டும். அது மூன்றாவது நாடால் கட்டுப்படுத்தப்படக்கூடாது.

ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பரேஸ்:

காஸா விவகாரத்தில் ஸ்பெயின் மிகவும் தெளிவாக இருக்க விரும்புகிறது. காஸா பகுதி, காஸா பாலஸ்தீனியர்களின் நிலம், அவர்கள் காஸாவில்தான் இருக்க வேண்டும். காஸா என்பது ஸ்பெயின் ஆதரிக்கும் எதிர்கால பாலஸ்தீன அரசின் ஒரு பகுதியாகும். இஸ்ரேலிய அரசின் செழிப்பையும், பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இரு நாடுகளும் இணைந்து வாழ வேண்டும்.

அயர்லாந்து அயர்லாந்தின் வெளியுறவு அமைச்சர் சைமன் ஹாரிஸ்:

அயர்லாந்து பார்வையில் பயணத்தின் திசை மிகவும் தெளிவாக இருக்கிறது. நமக்கு இரு நாடு தீர்வும் தேவை. பாலஸ்தீன மக்களும் இஸ்ரேல் மக்களும் பாதுகாப்பாக அருகருகே வாழும் நாடுகளாக வேண்டும். அங்குதான் கவனம் செலுத்தப்பட வேண்டும். காசா மக்களை வேறு எங்கும் இடம்பெயர்க்கும் எந்தவொரு யோசனையும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களுக்கு முரணானதாக இருக்கும்.

நெதன்யாகு - ட்ரம்ப்

பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (UK)

பாலஸ்தீனியர்கள் அவர்களின் சொந்த வீட்டிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும். அவர்கள் மீண்டும் அவர்கள் நாட்டைக் கட்டியெழுப்ப அனுமதிக்கப்பட வேண்டும். இரு நாடு தீர்வுக்கான வழியில் அந்த மறுகட்டமைப்பில் நாம் அவர்களுடன் இருக்க வேண்டும். பாலஸ்தீனியர்களுக்கு அவர்களின் தாயகத்தில்தான் அவர்களின் எதிர்காலம் உள்ளது. நாம் இரண்டு நாடுகளைக் காண வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதே நேரம், பாலஸ்தீனியர்கள் காஸா மற்றும் மேற்குக் கரையில் உள்ள அவர்களின் தாயகங்களில் வாழ்வதையும் நாம் காண வேண்டும்.

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா:

ட்ரம்பின் திட்டம் அர்த்தமற்றது. அவரின் திட்டம் செயல்படுத்தப்பட்டால், பாலஸ்தீனியர்கள் எங்கு வாழ்வார்கள்? இது எந்த மனிதனுக்கும் புரியாத ஒன்று. பாலஸ்தீனியர்கள் அவர்களின் சொந்த பூமியான காஸாவை கவனித்துக்கொள்வார்கள். அவர்கள்தான் அங்கு வாழ வேண்டும்.

ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ்:

இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய தீர்வை நோக்கி நகர இருநாட்டு அரசையும் தொடர்ந்து ஆதரிக்கிறோம். போர்நிறுத்தத்தை ஆதரித்துள்ளோம், பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவதை ஆதரித்துள்ளோம், காஸாவிற்குள் உதவி கொண்டுசெல்லப்பட வேண்டும் என்பதை ஆதரித்துள்ளோம்.

ட்ரம்ப் - நெதன்யாகு

ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ்:

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தில் ட்ரம்பின் திட்டம் சட்டவிரோதமானது, ஒழுக்கக்கேடானது, முற்றிலும் பொறுப்பற்றது. அவர் முன்மொழிவது ... முட்டாள்தனம். இது நெருக்கடியை இன்னும் மோசமாக்கும். கட்டாய இடப்பெயர்வைத் தூண்டுதல் சர்வதேச குற்றமாகும். சர்வதேச சமூகம் 193 நாடுகளால் ஆனது. எனவே, அமெரிக்கா தேடும் தனிமைப்படுத்தலை வழங்க வேண்டிய நேரம் இது.

உலக மனித உரிமைகள் ஆணையம் அம்னஸ்டி இன்டர்நேஷனல்:

அனைத்து பாலஸ்தீனியர்களையும் காஸாவிலிருந்து அகற்றுவது அவர்களை அழிப்பதற்குச் சமம். காஸா அந்த மக்களின் தாயகம். erஏற்கெனவே அமெரிக்காவின் குண்டுகளால் இஸ்ரேல் ஆயிரக்கணக்கான உயிர்களை அழித்துவிட்டது. இப்போது ட்ரம்ப் பேசுவது அதன் விளைவு.

Healthy Food: லோ கலோரி; நோ கொலஸ்ட்ரால்; கேன்சர் கண்ட்ரோல்... இத்தனையும் செய்யும் ஒரு காய்!

உடலில் நீர்ச்சத்தையும், வெப்ப நிலையையும் சீராகப் பராமரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் வெள்ளரிக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. மலிவான விலையில், மருத்துவப் பயன்கள் நிறைந்துகிடக்கும் வெள்ளரிக... மேலும் பார்க்க

திருநெல்வேலி: நாளை முதல்வர் திறக்க உள்ள பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட்! | Photo Album

நெல்லையில் திறப்பு விழா காணும் பிரமாண்டமான பாளையங்கோட்டை ஸ்மார்ட் சிட்டி மகாத்மா காந்தி மார்க்கெட்.! மேலும் பார்க்க

மோடி சொல்வதை இனி ஆளுநர் கேட்பாரா? Parliament Highlights | Delhi Election | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* மகா கும்பமேளாவில் இன்று நீராடிய பிரதமர் மோடி. * கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்?* ராகுலை மறைமுகமாக விமர்சித்த மோடி! * ராகுல் மீது உரிமை மீற... மேலும் பார்க்க

US issue: நாடு திருப்பிய இந்தியர்கள்; வைரலாகும் விலங்கு மாட்டிய படங்கள்... உண்மை என்ன?

அமெரிக்காவில் சட்டத்துக்குப் புறம்பாக குடியேறிய இந்தியர்களை இன்று இராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பி வைத்தது டிரம்ப் அரசு. 7 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை அமெரிக்கஅரசு வெளியேற்ற முடிவு செய்துள்... மேலும் பார்க்க

``முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை..'' -தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விளக்கம்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று (பிப்ரவரி 5) தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேசி இருக்கிறார்.அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வேல்முருகன், “முதலில் 21 வன்னிய போராளிக... மேலும் பார்க்க

Kumbh Mela: ``இது தெய்வீக இணைப்பின் தருணம்..'' -கும்பமேளாவில் நீராடிய பிரதமர் நரேந்திர மோடி

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் கடந்த மாதம் 13-ம் தேதி கும்பமேளா தொடங்கி நடந்து வருகிறது. இக்கும்பமேளாவிற்கு உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.... மேலும் பார்க்க