செய்திகள் :

Bill Gates: விவாகரத்துக்கு பின் காதலி குறித்து மனம் திறந்த பில் கேட்ஸ் - யார் இந்த பவுலா ஹார்ட்?

post image

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், பவுலா ஹர்டுடனான தனது உறவு பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு பில் கேட்ஸ் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்துகொண்டனர். இருவருக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்ததால், இனி தங்களால் இணைந்து வாழ முடியாது என்று 27 வருட திருமண வாழ்வை முறித்துக்கொண்டனர்.

இதன் பின்னர் கேட்ஸ் மற்றும் அவரின் புதிய காதலியான பவுலா ஹார்ட் உடம் பல நிகழ்ச்சிகளில் காணப்பட்டனர். பாரிஸ் ஒலிம்பிக், அனந்த் அம்பானியின் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் அவர்கள் ஒன்றாகக் காணப்பட்டனர்.

இந்த நிலையில், தனது புதிய காதல் குறித்து பில் கேட்ஸ் மனம் திறந்து பேசியுள்ளார். பவுலா ஹார்ட்-ஐ தற்போது காதலித்து வரும் பில் கேட்ஸ் அவர் குறித்து தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

Bill Gates and Paula Hurd

”தனக்கு பவுலா ஹார்ட் கிடைத்தது அதிர்ஷ்டம்” என்றும் ஒலிம்பிக்கிற்கு செல்வது மற்றும் பல சிறந்த விஷயங்களைச் செய்வது என இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

பவுலா ஹார்ட்

பிரபல மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் (Oracle) தலைமை செயல் அதிகாரி மார்க் ஹார்டின் மனைவி தான் இந்த பவுலா ஹார்ட். இருவரும் திருமணம் செய்து 30 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு மார்க் ஹார்ட் காலமானார்.

இதையடுத்து, 2022 ஆம் ஆண்டு முதல் பில் கேட்ஸுடன் பவுலா பழகி வந்தார். பொது இடங்களில் ஒருவருக்கொருவர் இணையாகக் காணப்பட்டாலும், பிப்ரவரி 2023ல் தங்களின் உறவு குறித்து உறுதிப்படுத்தினர். இந்த நிலையில் தான் பவுலாவுடன் தனது காதல் குறித்து பில் கேட்ஸ் மனம் திறந்துள்ளார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Couple Relationship: திருமண வாழ்க்கை சீராக செல்ல 10 வழிமுறைகள்..!

திருமண வாழ்க்கை 1. துணையின் உணர்வுகளை (feeling) புரிந்துகொள்ள வேண்டும். உறவுகள் வலுப்பெற வேண்டுமானால், உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது முக்கியம்.திருமண வாழ்க்கை 2. துணையிடம் தன் கடந்த காலத்தில் நடந்தவற்றி... மேலும் பார்க்க

சாப்பாடு பிரச்னையில் திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்... காவல் நிலையத்தில் நடத்தி வைத்த போலீஸார்

குஜராத் மாநிலம், சூரத்தில், உணவுப் பற்றாக்குறையால் மணமகன் வீட்டார் நிறுத்திய திருமணத்தை, போலீஸார் காவல் நிலையத்திலேயே நடத்திவைத்த சம்பவம், வெளியில் தெரியவந்திருக்கிறது. முன்னதாக, நேற்று முன்தினம் சூரத... மேலும் பார்க்க

Chief Dating Officer : பெங்களூரில் காதலில் கைதேர்ந்தவருக்கு வேலை; தகுதி என்னவென்று தெரியுமா?!

காதலர் தினம் நெருங்குவதனால் காதலைச் சுற்றிய விநோதங்கள் நம் கண்முன் வந்து விழுவது எதிர்பார்த்ததுதான். ஆனால் காதலில் கைதேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதெல்லாம் யாவருக்கும் அதிர்ச்சியாகவே ... மேலும் பார்க்க

``லிவ்-இன் ரிலேஷன்ஷிப் பிரச்னைகளைத் தீர்க்க இதை உருவாக்குங்கள்" - ராஜஸ்தான் நீதிமன்றத்தின் உத்தரவு

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களின் பாதுகாப்புக்குப் பொருத்தமான சட்டம் இயற்றப்படும் வரை, இந்த ரிலேஷன்ஷிப்பில் எழும் பிரச்னைகளைத் தீர்க்க வலைத்தளப் பக்கத்தை உருவாக்குமாறு மாநில அரசுக்கு ராஜஸ்தான் உ... மேலும் பார்க்க

Relationship: மிடில் ஏஜ்ல தேனிலவு ஏன் கட்டாயம் போகணும்?

இரண்டாவது தேனிலவு... தேனிலவுக்கே போகாத தம்பதியர்தான் நம்மிடையே அதிகம் பேர். இருந்தாலும், இரண்டாவது தேனிலவு செல்வது ஏன் அவசியம்; திருமணமான எத்தனை வருடங்கள் கழித்து இரண்டாவது தேனிலவுக்குச் செல்லலாம்? இத... மேலும் பார்க்க

`தன்பாலின திருமணச் சட்டம்' தாய்லாந்தில் அமலுக்கு வந்தது; அதிகாரபூர்வ திருமணம் செய்த LGBTQ+ ஜோடிகள்!

தாய்லாந்து அரசு, தன்பாலின திருமணத்துக்கு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கிய நிலையில், இன்று (ஜன.23) `தன்பாலின திருமணச் சட்டத்தை' அமலுக்கு கொண்டு வந்தது. இதனால், நூற்றுக்கணக்கான தன்பாலின ஈர்ப்பாளர்கள் தங்கள்... மேலும் பார்க்க