சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட் விலகல்!
காதலிக்க நேரமில்லை ஓடிடி தேதி!
காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் கிருத்திகா உதயநிதி - ரவி மோகன் கூட்டணியில் உருவான காதலிக்க நேரமில்லை திரைப்படம் கடந்த ஜன. 14-ல் வெளியானது. தன்பாலின ஈர்ப்பு, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் முறை என நவீன காதல் கதையாக உருவான இது ரூ. 10 கோடி வரை வசூலித்து வணிக ரீதியாகத் தோல்வியைச் சந்தித்தது.
ஆனால், காதல்களின் பல்வேறு கோணங்களை முடிந்தவரை திரைப்படமாக மாற்றியதற்காக கிருத்திகா உதயநிதி விமர்சகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றார்.
இதையும் படிக்க: அஜித் ... ஆக்சன்... திரில்லர்... ஆனால்..! விடாமுயற்சி - திரை விமர்சனம்!
இந்த நிலையில், இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் பிப். 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-06/zp81b5au/GjGMQc4W0AAydZy.jpg)