சாம்பியன்ஸ் டிராபி: தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் திடீர் விலகல்!
காதலை அறிவித்த நடிகை! நிஜ வாழ்க்கையில் இணைந்த சின்னதிரை தம்பதி!
சின்னதிரை நடிகை மேகா மகேஷ் தன்னுடன் நடித்த சக நடிகர் சல்மானுள் ஃபாரிஸ் உடனான காதலை அறிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களாகவே இருவரும் காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக இருவரும் தங்கள் காதலை ரசிகர்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெளன ராகம் இரண்டாம் பாகத்தில் நாயகான நடித்தவர் சல்மானுள் ஃபாரிஸ். கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், மெளன ராகம் தொடரில் நடித்ததன் மூலம் தமிழில் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
கேரளத்தில் அம்மயரியாதே, மிழி ரண்டிலும் என்ற இரு தொடர்களில் நடித்துள்ளார். இதில் மிழி ரண்டிலும் என்ற தொடரில் நடிகை மேகா மகேஷ் உடன் இணைந்து நடிக்கிறார்.
இந்தத் தொடர் மலையாள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இருவர் இணைந்து நடித்த பல காட்சிகளை இக்கால தலைமுறையினரும் ரசித்து தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இருவரும் அதிகாரப்பூர்வமாக தங்கள் காதலை ரசிகர்களுக்கு அறிவித்துள்ளனர்.
இது குறித்து நடிகை மேகா மகேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது,
மிஸ்டர் & மிசஸ் சஞ்சு முதல் மிஸ்டர் & மிசஸ் ஆகியுள்ளோம். இறுதியாக நாங்கள் இதை முடிவு செய்துள்ளோம். அதாவது, வாழ்வில் மகிழ்ச்சியையும் அன்பையும் அக்கறையையும் ஏற்ற இறக்கங்களையும் துன்பங்களையும், பயணங்களையும் பகிர்ந்துகொள்ள முடிவு செய்துள்ளோம். எங்களுக்கு ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் நன்றி. அனைவருக்கும் மிகுந்த அன்புகள் எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | மெளனம் பேசியதே தொடரில் ஜோவிதாவுக்கு பதிலாக புதிய நடிகை!