Amit shah-க்கு நெருக்கடி தரும் STALIN-ன் All India Move... டெல்லி ஸ்கெட்ச்! | El...
``அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்காத காங்கிரஸ், என்னை ஜெய்பீம் சொல்லச் சொல்கிறது '' -பிரதமர் மோடி
இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ம் தேதி நடைபெற்றது.
இந்த பட்ஜெட் வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்று பெரும் பேசுபொருளாகியிருந்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள், பட்ஜெட் மீது கேள்விகள் எழுப்பி பாஜக குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கூடிய நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது" என்று பேசியதற்குக் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்திருந்தன.
இந்நிலையில், இன்றைய (பிப் 6) நாடாளுமன்றக் கூட்டத்தில் அம்பேத்கர் குறித்துப் பேசியிருக்கும் பிரதமர் மோடி, "மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது 'பா.ஜ.க'தான். புதிய நாடாளுமன்றத்தின் முதல் முடிவாக இரு அவைகளிலும் மகளிருக்கு இடஒதுக்கீட்டை 'பா.ஜ.க' உறுதி செய்தது. அம்பேத்கரின் நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்டது காங்கிரஸ் கட்சிதான். அம்பேத்கருக்கு 'பாரத ரத்னா' வழங்காமல் மறுத்தது காங்கிரஸ். அதற்கு அவர் தகுதி என்றுகூட கருதியது. அவரை தேர்தலில் 2 முறை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் செய்தது. ஆனால், இப்போது என்னை 'ஜெய்பீம்' சொல்லச் சொல்கிறது.
பிறரை பலவீனப்படுத்துவதே காங்கிரஸின் வேலைத்திட்டம். இதனால்தான் அவர்களது கூட்டணியினர் கூட காங்கிரஸை விட்டு விலகிச் செல்கின்றனர்" என்று பேசியிருக்கிறார்.
மேலும், காங்கிரஸைக் கடுமையாகச் சாடி பேசியிருக்கும் மோடி, "குடும்ப நலனே முக்கியம் என்பது காங்கிரஸ் கட்சியின் மாடல். நாட்டின் நலன் முக்கியம் என்பதே எங்கள் 'பா.ஜ.க' வின் மாடல். எங்கள் மாடல் மீதான நம்பிக்கையிலும், நாட்டின் வளர்ச்சி மீதான நம்பிக்கையிலும்தான் மக்கள் எங்களை மூன்றாவது முறையாகத் தேர்தெடுத்துள்ளனர்" என்று பேசியிருக்கிறார்.