சாம்பியன்ஸ் டிராபி: தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் திடீர் விலகல்!
சாம்பியன்ஸ் டிராபிக்கான தென்னாப்பிரிக்க அணியில் இருந்து முன்னணி பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஜி திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகிறது. அனைத்து அணிகளும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன.
இதையும் படிக்க... சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட் விலகல்!
இந்த நிலையில், பிரிட்டோரியாவில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மைதானத்தில் பந்துவீசும்போது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதால், பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து ஜெரால்ட் கோட்ஜி விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
காயத்தால் அவதிப்பட்டாலும் எஸ்ஏ-20 தொடரின் ஒரு போட்டியில் மட்டும் விளையாடினார். முன்னதாக, தென்னாப்பிரிக்காவின் பயிற்சியாளர் ராப் வால்டர், லாகூரில் நியூசிலாந்திற்கு எதிரான முத்தரப்பு தொடரின் முதல் போட்டிக்கான 12 பேர் கொண்ட அணியை அறிவித்தபோது ஜெரால்ட் கோட்ஜியும் அணியில் இடம்பெற்றிருந்தார்.