செய்திகள் :

IndvEng : 'அடித்து ஆடிய ஸ்ரேயாஸ்; பக்குவம் காட்டிய கில்!' - இங்கிலாந்தை எப்படி வீழ்த்தியது இந்தியா?

post image
இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஓடிஐ தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. வழக்கம்போல இந்திய அணி ஆதிக்கமாக செயல்பட்டு முதல் போட்டியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்திய அணி எப்படி வென்றது மற்றும் போட்டியின் முக்கியமான தருணங்களை பற்றி இங்கே.
India vs England

போட்டிக்கு முன்பாகவே ரசிகர்களுக்கு ஒரு ஷாக் காத்திருந்தது. முட்டியில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக விராட் கோலி இந்தப் போட்டியில் ஆடமாட்டார் எனும் தகவல் வெளியானது. ரசிகர்கள் நொந்துவிட்டார்கள். கடந்த மாதம்தான் கழுத்து வலி காரணமாக ரஞ்சிப் போட்டியை தவறவிட்டிருந்தார். கோலி காயம் காரணமாக போட்டிகளை தவறவிடுவது அரிதுனும் அரிது. கையில் தையல் போட்டுக் கொண்டு செஞ்சுரியாகவெல்லாம் அடித்து தள்ளியிருக்கிறார். அப்படிப்பட்டவர் காயம் காரணமாக ஆடாமல் பென்ச்சில் இருந்தது ரசிகர்களை நிஜமாகவே வருத்தம் கொள்ள வைத்தது. அவருக்கும் வயது ஆகிறதோ

A

Salt

இங்கிலாந்து அணிதான் டாஸை வென்றது. பட்லர் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தார். இங்கிலாந்து அணி பேட்டிங்கையும் தொடங்கியது. கடந்த 2023 உலகக்கோப்பைக்குப் பிறகு ஷமி மீண்டும் ஓடிஐ போட்டிகளுக்கு வந்திறங்கியிருந்தார். முதல் ஓவரையே அவர்தான் வீசினார். 6 பந்துகளும் டாட். முதல் ஓவரே மெய்டன். பில் சால்ட்டும் பென் டக்கட்டும்தான் களத்தில் நின்றனர். இங்கிலாந்து கொஞ்சம் நிதானமாக ஆட முயற்சிக்கிறதோ என தோன்றியது. ஆனால், முதல் சில ஓவர்களை விட்டுவிட்டு அதிரடியை ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பாக, ஹர்ஷித் ராணா வீசிய ஒரு ஓவரில் 3 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 26 ரன்களை சேர்த்தார் பில் சால்ட். ஹர்ஷித் ராணா வீசிய ஸ்லோயர் ஒன்னை முட்டி போட்டு ஸ்பின்னரை அடிப்பதை போல அடித்ததெல்லாம் செம க்ளாஸ். பென் டக்கட்டும் அவ்வபோது பவுண்டரிகளை அடித்து வேகமெடுக்க உதவினார். தவறான மேட்ச் அப்பாக டக்கெட்டுக்கு அக்சர் வீச அவரின் ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விளாசினார்.

முதல் விக்கெட்டுக்கு இந்த கூட்டணி 75 ரன்களை சேர்த்தது. இந்திய அணி இந்த கூட்டணியை உடைக்க முடியாமல் திணறியது. இந்திய அணியின் சங்கடத்தை புரிந்துகொண்டு அவர்களே அலட்சியமாக ஆடி விக்கெட்டை கொடுத்தார். ஹர்திக் வீசிய 9 வது ஓவரில் சால்ட் பேக்வர்ட் பாய்ண்ட்டில் ஒரு பந்தை அடிப்பார். ஸ்ரேயாஸ் அதை சேஸ் செய்து பவுண்டரி செல்ல விடாமல் தடுப்பார். அதற்குள் இவர்கள் இரண்டு ரன்களை ஓடிவிடுவார்கள். பந்தை பார்த்துக் கொண்டிருந்த டக்கெட்டை கவனிக்காமல் சால்ட் மூன்றாவது ரன்னுக்காக பாதி பிட்ச்சுக்கு ஓடி வந்துவிடுவார். Easy Run Out. நன்றாக ஆடிக்கொண்டிருந்த சால்ட் 43 ரன்களில் அவுட். இந்த விக்கெட் அடுத்தடுத்து தொடர்ந்து இரண்டு விக்கெட்டுகளையும் பெற்றுக் கொடுத்தது.

Harshit Rana

பவர்ப்ளேயின் கடைசி ஓவர் என்பதால் ஹர்ஷித் ராணாவை அட்டாக் செய்ய முயன்று டக்கெட் மிட் விக்கெட்டில் 32 ரன்களில் கேட்ச் ஆகியிருந்தார். அதே ஓவரில் லெக் சைடில் எகிறி சென்ற பந்தை தொட்டு எட்ஜ் ஆகி ராகுலிடம் பிடிபட்டு ஹாரி ப்ரூக் டக் அவுட் ஆனார்.

இதன்பிறகு ரூட்டும் பட்லரும் கூட்டணி சேர்ந்தனர். நிதானமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்க முயன்றனர். நிறைய டாட்களை ஆடினர். பெரிய ஷாட்டுகளை தவிர்த்து ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தனர். ஆனாலும் பார்ட்னர்ஷிப் நீடிக்கவில்லை. ரூட் 19 ரன்களில் ஜடேஜா டைட்டாக வீசிய பந்தில் lbw ஆகி வெளியேறினார்.

பட்லரும் ஜேக்கப் பெத்தேலும் இணைந்தனர். இவர்கள் இருவரும் ஆடிய ஆட்டம்தான் இங்கிலாந்தை ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை எடுக்க வைத்தது. குல்தீப் யாதவ், ஜடேஜா, அக்சர் படேல் என ஸ்பின்னர்கள் மூவரும் மாற்றி வீசினர். இவர்களை இருவரும் நேர்த்தியாக சமாளித்திருந்தனர். ரிஸ்க் எடுக்காமல் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தே அணியை ஓரளவுக்கு சரிவிலிருந்து மீட்டனர். பட்லர் அரைசதத்தையும் கடந்தார். ஆனால், இந்த பார்ட்னர்ஷிப் கியரை மாற்ற வேண்டிய இடத்தில் சரியாக உடைபட்டது. பைன் லெக்கை வட்டத்துக்குள் வைத்துக் கொண்டு அக்சர் படேல் வீசிய 33 வது ஓவரில் ஒரு பவுண்டரியை க்ளியர் செய்ய முயன்று அந்த ஷார்ட் பைன் லெக்கிடமே கேட்ச் ஆனார் பட்லர். 57 ரன்களை சேர்த்திருந்தார். பெத்தேல் இன்னும் கொஞ்சம் நேரம் நின்றார். அரைசதத்தை கடந்தார். அவரும் ஸ்பின்னரிடமே அவுட் ஆனார். 51 ரன்களில் ஜடேஜாவின் பந்தில் lbw. இடையில் லிவிங்ஸ்டனும் கார்ஸூம் வேறு சொற்ப ரன்களில் அவுட் ஆகி விட்டு சென்றிருந்தனர்.

Buttler

பெத்தேல் அவுட் ஆன பிறகு இங்கிலாந்து அணியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 47.4 ஓவர்களுக்கு 248 ரன்களுக்கு ஆல் அவுட்.

இந்திய அணி சேஸிங்கை தொடங்கியது. இங்கிலாந்துக்கு கிடைத்த நல்ல தொடக்கம் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை. ரோஹித்தின் அவுட் ஆப் பார்ம் ஓடிஐ தொடர்களிலும் தொடர்ந்தது. 7 பந்துகளில் 2 ரன்களை மட்டுமே எடுத்து ஷகீப் மஹ்மூத்தின் பந்தில் டாப் எட்ஜ் ஆகி லிவிங்ஸ்டனிடம் கேட்ச் ஆனார். கடந்த உலகக்கோப்பையில் பவர்ப்ளேயில் ரோஹித் ஆடிய ருத்ரதாண்டவமெல்லாம் அப்படியே கண் முன் வந்து சென்றது. ரோஹித்துக்கு முன்பாகவே ஜெய்ஸ்வால் காலி. ஆர்ச்சர் 4th ஸ்டம்ப் லைனில் வீசிய பந்தை சரியாக டிபன்ஸ் ஆடாமல் எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் ஆனார். ஜெய்ஸ்வால் 15 ரன்களை எடுத்திருந்தார். ரோஹித் செய்யாததை ஸ்ரேயாஸ் ஐயர் செய்தார்.

ஸ்ரேயாஷ் ஐயருக்கு ஷார்ட் பாலை ஆட வராது. நிறைய முறை அவுட் ஆகியிருக்கிறார். ஷார்ட் பால்கள்தான் அவரின் வீக்னஸ். 'எனக்கு ஷார்ட் பால் ஆடத் தெரியாதா..' என பத்திரிகையாளர்களிடம் முகம் காட்டும் அளவுக்கு ஷார்ட் பால்கள் அவரின் நிம்மதியை குலைத்த சம்பவமெல்லாம் உண்டு. ஆனால், இங்கே இன்று ஸ்ரேயாஷ் ஐயர் ஷார்ட் பால்களை க்ளீன் ஹிட்டாக வெளுத்தெடுத்தார். குறிப்பாக, ஆர்ச்சரின் ஓவரில் மிட் விக்கெட்டிலும் தேர்டு மேனில் ஷார்ட் பால்களில் இரண்டு சிக்சர்களை அடித்திருப்பார். அங்கிருந்துதான் வேகம் பிடித்தார். எல்லா பௌலர்களையும் அட்டாக் செய்தார். இன்னொரு பக்கம் கில் நிதானமாக நின்று விக்கெட்டை விடாமல் பார்த்துக் கொண்டார்.

Shreyas

ஸ்ரேயாஷ் 30 பந்துகளிலேயே அரைசதத்தையும் எட்டினார். சதத்தை நோக்கி செல்வார் என நினைக்கையில் 59 ரன்களில் பெத்தேலின் பந்தில் lbw ஆகி வெளியேறினார். லெப்ட் ரைட் காம்பீனேஷனை மனதில் வைத்தும் அடீல் ரஷீத்தை டேக்கிள் செய்யும் விதத்திலும் அக்சர் படேல் நம்பர் 5 இல் அனுப்பப்பட்டார். எதிர்பார்த்ததை போலவே அடில் ரஷீத், பெத்தேல் போன்றோரின் ஓவரில் பவுண்டரிக்களையும் சிக்சரையும் அடித்தார் அக்சர். இன்னொரு பக்கம் கில்லும் மெது மெதுவாக்ச் கியரை மாற்றி வேகமெடுக்க ஆரம்பித்தார். ஆர்ச்சர், கார்ஸ் போன்றோரை அட்டாக் செய்து பவுண்டரிக்களை அடித்தார். இருவரும் அரைசதத்தை கடந்தனர். சிறப்பான பார்ட்னர்ஷிப். இருவரும் இணைந்து 108 ரன்களை சேர்த்தனர். இந்திய அணியும் வெற்றியை நெருங்கியது. ஆனால், கடைசிக்கட்டத்தில் அடில் ரஷீத் சில விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்து நெருக்கடி கொடுத்தார்.

அரைசதத்தை கடந்திருந்த அக்சர் படேலை பயங்கரமான ஸ்பின்னில் வீழ்த்தி போல்டாக்கினார். பட்லரும் இரண்டு ஸ்லிப், சில்லி மிட் ஆன் என வைத்து அட்டாக் செய்தார். இதற்கு பலனாக கே.எல்.ராகுலின் விக்கெட்டும் கிடைத்தது. சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த கில்லும் மஹ்மூத்தின் பந்தில் பெரிய ஷாட்டுக்கு முன்று மிட் ஆனால் கேட்ச் ஆனார். கில் 87 ரன்களை எடுத்திருந்தார். சூழலை உணர்ந்து பக்குவமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

3 விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தாலும் டார்கெட் குறைவு என்பதால் இந்தியாவுக்கு சிரமமே ஏற்படவில்லை. ஹர்திக்கும் ஜடேஜாவும் வெற்றிக்கோட்டை கடக்க வைத்துவிட்டார்கள்.

Gill

3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரில் முதல் போட்டியை இந்திய அணி வென்றிருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக இந்திய அணி ஆடும் கடைசி ஓடிஐ தொடர் இது என்பதால் கட்டாயம் வெல்லும் முனைப்பில் இந்திய அணி இருக்கிறது.

Varun Chakaravarthy : 'இந்திய ஓடிஐ அணியில் வருண் சக்கரவர்த்தி!' - வெளியான அறிவிப்பு!

இந்திய டி20 அணியில் ஆடி சிறப்பான செயல்பாட்டை கொடுத்து வந்த வருண் சக்கரவர்த்தி, இப்போது முதல் முறையாக இந்தியாவின் ஓடிஐ அணியிலும் சேர்க்கப்பட்டிருக்கிறார்.Varun Chakaravarthyஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ... மேலும் பார்க்க

Weird Games: 'பீர் ஓட்டம்' முதல் 'மண்வெட்டிச் சறுக்கல்' வரை; இந்த வினோத பந்தயங்களைத் தெரியுமா?

விளையாட்டு என்றால் சவால் இருக்க வேண்டும், வேடிக்கை இருக்க வேண்டும், போட்டி இருக்க வேண்டும் எல்லாம் கூடி வந்தாலே எல்லாரும் சந்தோசப்படும் வகையில் விளையாட்டு அமையும். அப்படிப்பட்ட சில விளையாட்டுகளைத்தான்... மேலும் பார்க்க

Concussion Substitute : 'இந்திய அணி செய்தது சரிதானா?' - விதிமுறை என்ன சொல்கிறது? |Explainer

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டி20 போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியில் இடையே சிவம் துபேவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணாவை 'Concussion Sub' ஆக இந்திய அணி பயன்படுத்தியிருந்த... மேலும் பார்க்க

Concussion Substitute : 'என்னால் அதை துளி கூட ஏற்க முடியாது!' - கொதித்தெழுந்த பட்லர்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டி20 போட்டியில் புனேவில் நடந்திருந்தது. அதில், இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தப் போட்டியில் சிவம் துபேக்கு பதில் 'Con... மேலும் பார்க்க

Virat Kohli: ரஞ்சி கோப்பையில் கோலி; அலைமோதிய ரசிகர்கள்; நெகிழ்ச்சியான மைதானம்... | Ranji Updates

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி மற்றும் ரயில்வேஸ் அணிக்கு எதிராக ரஞ்சி தொடரின் லீக் போட்டி நடந்து வருகிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சிப் போட்டியில் டெல்லி அணிக்காக கோலி இறங்குவதால் மைதானத்தி... மேலும் பார்க்க

IndvEng: 'தேவையற்ற ஷாட்கள்; சூழலை உணராத அக்ரஸன்!' - இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா எப்படி தோற்றது?

இது ப்ளாட் பிட்ச். இங்கிலாந்து அடித்திருப்பது சுமாரான ஸ்கோர். இந்தியா இந்த டார்கெட்டை எளிதில் சேஸ் செய்யும், செய்தே ஆக வேண்டும்... ஏக ஸ்ருதியில் வர்ணனையாளர்கள் அத்தனை பேரும் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால... மேலும் பார்க்க