Career: இன்ஜினியரிங் படித்திருக்கிறீர்களா... இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப வேலை...
Concussion Substitute : 'என்னால் அதை துளி கூட ஏற்க முடியாது!' - கொதித்தெழுந்த பட்லர்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டி20 போட்டியில் புனேவில் நடந்திருந்தது. அதில், இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தப் போட்டியில் சிவம் துபேக்கு பதில் 'Concussion Sub' ஆக ஹர்ஷித் ராணா இறக்கப்பட்டிருந்தார். ஒத்த பண்புடைய வீரர்களைத்தான் 'Concussion Sub' ஆக பயன்படுத்த முடியும் என்ற சூழலில் ஆல்ரவுண்டர் துபேக்கு பதில் வேகப்பந்து வீச்சாளர் ராணாவை இறக்கியது சர்ச்சையாகியிருக்கிறது. இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லரே இந்திய அணிக்கு எதிராக கொந்தளித்திருக்கிறார்.
இந்திய அணி பேட்டிங் ஆடிய போது ஓவர்டன் வீசிய கடைசி ஓவரின் 5 வது பந்தில் துபே ஹெல்மட்டில் அடி வாங்கினார். இதைத் தொடர்ந்து பௌலிங்கின் போது துபே பீல்டுக்கு வரவில்லை. அவருக்கு பதில் ராணா 'Concussion Sub' ஆக இந்திய அணி இறக்கியது. ராணா உள்ளே வந்து 4 ஓவர்களையும் வீசி லிவிங்ஸ்டன் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார். போட்டிக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் இதைப்பற்றி பேசுகையில், ''துபேக்கு பதில் ஹர்ஷித் ராணா இறங்கியது 'like to like replacement' யே கிடையாது. எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நான் பேட்டிங் ஆட வரும்போது எதற்காக ஹர்ஷி ராணா களத்திற்கு வருகிறார் எனும் கேள்வி எழுந்தது. அவர்தான் 'Concussion Sub' என்றார்கள். என்னால் அதை துளி கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அம்பயர்தான் அந்த முடிவை எடுத்தார் அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்கள். அடுத்தப் போட்டியின் டாஸின் போது வந்து 11 பேருக்கு பதில் 12 பேர் ஆடிகிறோம் என நான் சொல்லட்டுமா?
'Concussion Sub' ஆக ஹர்ஷித் ராணா வருவதைப் பற்றி எங்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை. எங்களிடம் அதைப்பற்றி கேட்கவே இல்லை. ஆனால், அதுமட்டுமேதான் எங்களின் முழுக்காரணம் என்றும் சொல்லமாட்டேன்.' என்றார்.
இந்திய அணி 'Concussion Sub' ஆக ஷிவம் தூபே வுக்கு பதில் ராணாவை பயன்படுத்தியதை பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.