பட்ஜெட்: 3-வது முறையாக சனிக்கிழமை செயல்படும் பங்குச் சந்தை!
2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யவிருப்பதால் மும்பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையும் வழக்கம் போல் செயல்படவுள்ளன.
இது குறித்து தேசிய பங்குச் சந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில் சனிக்கிழமை விடுமுறை என்றாலும், பட்ஜெட் தாக்கல் செய்வதால் வழக்கமான நேரத்தில் பங்குச் சந்தைகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து!
வழக்கமாக வார இறுதி நாள்கான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தை செயல்படாது. திங்கள் - வெள்ளி வரையிலான வார நாள்களில் மட்டுமே செயல்படும்.
இந்த நிலையில், மத்திய பட்ஜெட் அறிவிப்புகளுக்கு ஏற்ப பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு ஏதுவாக பங்குச் சந்தை செயல்படவுள்ளன.
இதற்கு முன்பு 2020, 2015 ஆகிய ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளுக்கும் வார இறுதி நாளையும் பொருட்படுத்தாது பங்குச் சந்தை இயங்கியது குறிப்பிடத்தக்கது.