மத்திய பட்ஜெட் 2025-26: செய்திகள் உடனுக்குடன் - நேரலை!
மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
வரும் 2025 - 2026 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
மக்களவையில் இன்னும் சற்றுநேரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார்.
குடியரசுத் தலைவருடன்
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதை அடுத்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்துக்கு செல்லும் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறவுள்ளார்.
பங்குச் சந்தைகள்
2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யவிருப்பதால் மும்பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையும் வழக்கம் போல் செயல்படவுள்ளன.
இது குறித்து தேசிய பங்குச் சந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில் சனிக்கிழமை விடுமுறை என்றாலும், பட்ஜெட் தாக்கல் செய்வதால் வழக்கமான நேரத்தில் பங்குச் சந்தைகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.