"டங்ஸ்டன் விவகாரத்தில் வடிவேலு போல முதல்வர் ஸ்டாலின் நடந்து கொள்கிறார்" - செல்லூ...
Union Budget 2025: 'ரூ.12 லட்சம்!' - வருமான வரி உச்ச வரம்பு உயர்வு - மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு!
வருமான வரியில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பரவலாக எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.
நடுத்தர மக்கள் இந்திய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை ஆற்றுகின்றனர் என்று பேசத் தொடங்கிய நிர்மலா சீதாராமன், வருமான வரி உச்சவரம்பை அதிகரித்து கூறியதாவது...
"வருமான வரிக்கான உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 12 லட்சத்திற்கு மேலான வருமானங்களுக்கு விதிக்கப்படும் வருமான வரி ஆனது...
0 - 4 லட்சம் ரூபாய் வரையில் வருமான வரி இல்லை.
4 - 8 லட்சம் ரூபாய்க்கு 5% வருமான வரி
8 -12 லட்சம் ரூபாய்க்கு 10 சதவிகித வருமான வரி
12 - 16 லட்சம் ரூபாய்க்கு 15% வருமான வரி
16 - 20 லட்சம் ரூபாய்க்கு 20% வருமான வரி
20 - 24 லட்சம் ரூபாய்க்கு 25% வருமான வரி
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30% வருமான வரி.