செய்திகள் :

`Right to Die With Dignity' - முதல் மாநிலமாக உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தும் கர்நாடகா!

post image

குணப்படுத்த முடியாத, உயிர் காக்கும் சிகிச்சையில் உள்ள நோயாளிகள் "கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமையை" அனுமதிக்கும் வகையில், கர்நாடக அரசு ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளதாக, டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு இவ்வாறு குணப்படுத்த முடியாமல் இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சையை நிறுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, கர்நாடகா அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றுச் சட்டம், 1994-ன் கீழ் உரிய அதிகாரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நரம்பியல் நிபுணர், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், அறுவை சிகிச்சை நிபுணர், மயக்க மருந்து நிபுணர் அல்லது தீவிர சிகிச்சை நிபுணர் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டதாகக் கருதப்படுவார்கள் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

மாவட்ட சுகாதார அதிகாரி (DHO) மருத்துவ நிபுணர்களின் இரண்டாம் நிலை குழுவின் உறுப்பினராக அத்தகைய இறப்புகளுக்குச் சான்றளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நோயாளிகள் அனுமதிக்கப்படும் மாநிலம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு நடத்தும் மருத்துவ நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் எனவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதே போன்ற உத்தரவுகளை கேரளா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் பிறப்பிக்கவுள்ளதாக மும்பையின் பிடி ஹிந்துஜா தேசிய மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் நரம்பியல் நிபுணரான டாக்டர் ரூப் குர்சஹானி என்பவர் கூறியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் இது குறித்து கூறுகையில், ``இது மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளின் குடும்பங்களுக்குப் பயனளிக்கும்” என்றார். மேலும், ``இதை கருணைக் கொலையுடன் இணைத்து தவறாக புரிந்துகொள்ளக் கூடாது. சிகிச்சையால் எவ்வித பயனும் இல்லாமல், குணப்படுத்த முடியாதவர்களுக்கும் மட்டுமே இது பொருந்தும்" என்றும் அவர் கூறியிருப்பதாக அச்செய்தித் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Pregnancy: `கருவுக்குள் கரு' - 5 லட்சம் கருக்களில் ஒன்றுக்கு ஏற்படும் அரியவகை; என்ன சிகிச்சை?

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் 32 வயது கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள கருவின் உள்ளே மற்றொரு கரு இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவ உலகில் மிக மிக அரிதான ஒன்றாகப் பார்... மேலும் பார்க்க

Apollo: வானகரத்தில் தனது 3-வது புற்றுநோய் சிகிச்சை மையத்தை தொடங்கிய அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் சென்னை மாநகரில் அதன் 3-வது புற்றுநோய் சிகிச்சை மையத்தை பெருமிதத்துடன் இன்று தொடங்கி வைத்திருக்கிறது.வானகரத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த முழுமையான புற்றுநோய் சிகிச்சை மையம், தமிழ்நாட... மேலும் பார்க்க

Health: வெளிநாட்டுப் பழங்கள் நமக்கு நல்லதா?

வெளிநாட்டுப்பழங்கள் அதிகமாக கிடைக்க ஆரம்பித்துவிட்டன. குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். வெளிநாட்டுப் பழங்கள் நமக்கு நல்லதா? உணவு ஆலோசகர் ஷைனி சந்திரனிடம் பேசி... மேலும் பார்க்க

குன்னூர்: மஞ்சள் காமாலை பதற்றத்தில் உலிக்கல் பேரூராட்சி மக்கள்! - அதிகாரிகள் சொல்வதென்ன?

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் இருக்கிறது உலிக்கல் பேரூராட்சி. 17 வார்டுகளைக் கொண்ட இந்த பேரூராட்சி பழங்குடிகள், தோட்ட தொழிலாளர்கள், விவசாய கூலிகள், சிறு குறு வணிகர்கள் அதிகமுள்ள பகுதியாக இருக்கிற... மேலும் பார்க்க

Health: பனிக்காலமும் பனிக்காற்றும்... யாரையெல்லாம் அதிகம் பாதிக்கும்? - மருத்துவர் விளக்கம்!

காலையில் வானம் சில நாள் சிறு தூறல் போடுகிறது. கூடவே குளிரும் தாங்க முடியவில்லை. இந்தப் பனிக்காலம் சளி, இருமல், காய்ச்சல் என்று அனைத்து வயதினரையும் பாடாய்ப்படுத்திக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, வயதானவர்... மேலும் பார்க்க

Amitabh: "யோகா, துளசி, நெல்லிக்காய் ஜூஸ்" - 82 வயதில் அமிதாப் பச்சன் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி?

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது 82 வயதிலும் உடல் ஆரோக்கியத்துடன் இருந்து அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார். அமிதாப் பச்சன் தற்போது படங்களில் நடித்து வருவதோடு, கோன் பனேகா கரோர்பதி நிகழ்ச்சியைய... மேலும் பார்க்க