செய்திகள் :

குன்னூர்: மஞ்சள் காமாலை பதற்றத்தில் உலிக்கல் பேரூராட்சி மக்கள்! - அதிகாரிகள் சொல்வதென்ன?

post image

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் இருக்கிறது உலிக்கல் பேரூராட்சி. 17 வார்டுகளைக் கொண்ட இந்த பேரூராட்சி பழங்குடிகள், தோட்ட தொழிலாளர்கள், விவசாய கூலிகள், சிறு குறு வணிகர்கள் அதிகமுள்ள பகுதியாக இருக்கிறது. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட சில கிராமங்களைச் சேர்ந்த மக்களில் சிலருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறிகளும் தென்பட்டிருக்கிறது. குன்னூரில் உள்ள தனியார் உடல் பரிசோதனை மையத்தில் சோதனை மேற்கொண்டதில் சிலருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலாஸ்

அச்சமடைந்த மக்கள், கோவை மாவட்டம், கேரள மாநில எல்லைப் பகுதியில் நாட்டு வைத்தியம் மூலம் மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை மூலம் சேலாஸ் பகுதியில் முகாம் அமைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். சேலாஸ் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பதாக கூறப்படுவதால், மக்கள் தாமாகவே முன்வந்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்த சுகாதாரத்துறை அதிகாரிகள், "உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களில் 6 நபர்களுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். புதிதாக 4 நபர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் இங்கிலீஷ் மருத்துவத்தை தவிர்த்து நாட்டு வைத்தியம் பெற்று வருகின்றனர். ஊட்டி மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தி வருகிறோம். குடிநீர் ஆதாரங்களில் மாசு ஏற்பட்டு அதன் மூலமாக இந்த பாதிப்பு ஏற்படலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

நீர் நிலை

சேலாஸ் , பில்லிமலை, நீர்மம்முட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் ஆதாரங்களை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. காய்ச்சிய குடிநீரை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துமாறு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்த பகுதியில் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிப்பதாக சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை " என்றனர்.

Health: பனிக்காலமும் பனிக்காற்றும்... யாரையெல்லாம் அதிகம் பாதிக்கும்? - மருத்துவர் விளக்கம்!

காலையில் வானம் சில நாள் சிறு தூறல் போடுகிறது. கூடவே குளிரும் தாங்க முடியவில்லை. இந்தப் பனிக்காலம் சளி, இருமல், காய்ச்சல் என்று அனைத்து வயதினரையும் பாடாய்ப்படுத்திக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, வயதானவர்... மேலும் பார்க்க

Amitabh: "யோகா, துளசி, நெல்லிக்காய் ஜூஸ்" - 82 வயதில் அமிதாப் பச்சன் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி?

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது 82 வயதிலும் உடல் ஆரோக்கியத்துடன் இருந்து அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார். அமிதாப் பச்சன் தற்போது படங்களில் நடித்து வருவதோடு, கோன் பனேகா கரோர்பதி நிகழ்ச்சியைய... மேலும் பார்க்க

Doctor Vikatan: நீரிழிவு நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடலாமா?

Doctor Vikatan:இப்போது எங்கு பார்த்தாலும் பனங்கிழங்கு கிடைக்கிறது. கிழங்கு சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறவர்கள் பனங்கிழங்கு சாப்பிடலாமா.... அதில் நார்ச்சத்து தவிர வேறு என்ன இருக்கிறது? ஆண்மை வ... மேலும் பார்க்க

Skin Health: மரு... அழகுப் பிரச்னையா? ஆரோக்கியப் பிரச்னையா?

பெண்களின் சருமம் தொடர்பான பிரச்னைகளில் ஒன்று மரு. முகம், கழுத்து, விரல்கள், உள்ளங்கை, உள்ளங்கால், அரிதாகப் பிறப்புறுப்பிலும் கூட மரு வரலாம். இவற்றுக்கான காரணங்கள், தீர்வுகள் பற்றிச் சொல்கிறார் சரும மர... மேலும் பார்க்க

Health: மீசை, தாடி வளரவில்லையா..? காரணம் இதுவாகவும் இருக்கலாம்!

மீசை இருந்தால்தான் ஆண் மகன் என இன்னும் சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் 'மொழுமொழு’ பாலிவுட் 'கான்’கள் ஸ்டைலுக்கு மாறிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், சிலருக்கு மீசை வைக்க வேண்டும் என்ற ஆ... மேலும் பார்க்க

Health: இனிமேல் பழங்களின் தோலைத் தூக்கிப் போடாதீங்க..!

பழங்களை வாங்கியவுடன் நாம் முதலில் செய்யும் வேலை பழத்தின் தோல்களை நீக்குவதுதான். தோல்கள் என்றாலே தேவையற்றவை, அவற்றில் செடியில் தெளிக்கப்பட்ட ரசாயனங்களின் மிச்சம் இருக்கும் என்று நம் மனதில் பதிந்துபோனதன... மேலும் பார்க்க