"Seemanக்கு கட்சி நடத்தும் தகுதியில்ல" - NTKவில் இருந்து விலகியவர்கள் ஆவேசம்
காமராஜா் துறைமுகத்தில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் வேலை
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காமராஜா் துறைமுகத்தில் காலியாக உள்ள எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: junior Executive (Finance)
காலியிடங்கள்: 3
வயது: 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
தகுதி: chartered Accountant,cost and works Accountants-இல் தேர்ச்சியுடன் Business Management in Finance பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Deputy Manager (Finance)
காலியிடங்கள்: 2
வயது: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000
தகுதி: CA/CWA -இல் தேர்ச்சியுடன் Business Management in Finance பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க.. ரூ.1,40,000 சம்பளத்தில் பெல் நிறுவனத்தில் வேலை!
வயது வரம்பு: உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டண்ணம்: பொதுபிரிவினருக்கு ரூ.400. ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.300, எஸ்சி, எஸ்டி, பெண்கள் ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://www.ipa.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.2.2025
இது தொடர்பான மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.