தஞ்சாவூர்: ”3 லட்சம் ஹெக்டேர் நெல் சாகுபடியில் 154 பேர் மட்டும் இயற்கை விவசாயம்” - கலெக்டர் ஆதங்கம்
தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்), பெங்களூரு மண்டல உயிர்ம மற்றும் இயற்கை வேளாண் மையம், தமிழ்நாடு அரசு விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்புத் துறை, நிப்டெம் நிர்வாகம் ஆகியவைச் சார்பில் மண்டல அளவிலான இயற்கை வேளாண் கருத்தரங்கம் நடந்தது.
இதில், பெங்களூரு மண்டல உயிர்ம மற்றும் இயற்கை வேளாண் மைய இயக்குநர் வர்மா, ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பேசியதாவது, "தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, கோடை ஆகிய மூன்று பருவங்களையும் சேர்த்து மொத்தம் மூன்று லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் 424 ஹெக்டேரில் 154 பேர் மட்டுமே இயற்கை விவசாயம் செய்துள்ளனர். விவசாயிகளிடம் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிக அளவில் சிறு, குறு விவசாயிகள் உள்ளனர். அவர்களுக்கு லாபம் கிடைக்கும் விதமாக இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உதாரணமாக, ஐந்து ஏக்கர் வைத்துள்ள விவசாயிகளிடம் அரை ஏக்கர் அளவுக்கு இயற்கை விவசாயத்தைச் செய்யுமாறு ஊக்கப்படுத்தி, அவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று, கிராம அளவில் 10 அல்லது 20 பேருக்கு இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி அளிக்க வேண்டும். ஒவ்வொரு விவசாயியிடமும் முதலில் அரை, அரை ஏக்கராக இயற்கை விவசாயத்தை விரிவாக்கம் செய்ய வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs