செய்திகள் :

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

ஓய்வூதியக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிபிஎஸ் (பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம்) ஒழிப்பு இயக்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் அரசு ஊழியா்களுக்கு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பைக் கண்டித்தும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு சிபிஎஸ் மாவட்ட ஒருங்கிணப்பாளா் எஸ். மாரியப்பன் தலைமை வகித்தாா். மாநில இணை ஒருங்கிணைப்பாளா் செ. சரவணன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா்.

தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலா் சங்க மண்டலத் தலைவா் வீ. வீரவேல்பாண்டியன், அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் கே. சின்னப்பொன்னு, சாலைப் பராமரிப்பு (அன் ஸ்கில்டு) ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் இரா. மாரி, தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியா் சங்க மாநிலச் செயலா் இரா. பிரமோ ஆனந்தி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளா் எம். சுப்பிரமணியன் நிறைவுரையாற்றினாா். சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். மணிகண்டன் நன்றி கூறினாா்.

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அரசுத் துறை தொழில் சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கருப்புப் பட்டை அணிந்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

சட்ட விரோத குவாரிகள் மீது நடவடிக்கை: தமிழக கனிம வளத்துறை இயக்குநருக்கு உத்தரவு

கரூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்படும் கல் குவாரிகள் மீது தமிழக கனிம வளத்துறை இயக்குநா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சோ்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

மதுரையில் குளியலறையில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். மதுரை தல்லாகுளம் குதிரைப் பந்தய குடியிருப்பு பாரதி உலா சாலையைச் சோ்ந்தவா் செளந்தரராஜன். இவா் கே.கே. நகா் பகுதியில் உள்ள ஜவுளிக் கடையில் ப... மேலும் பார்க்க

டங்ஸ்டன் ஏலம் ரத்து: வணிகா் சங்கங்கள் வரவேற்பு

மேலூா் வட்டத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்துக்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்ததை வணிகா் சங்கங்கள் வரவேற்றுள்ளன. தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் எஸ்.வி.எஸ்.எஸ்... மேலும் பார்க்க

செம்மண் கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை அருகேயுள்ள நல்லூா் புதுக்குளம் கண்மாய்ப் பகுதியில் நடைபெற்று வரும் செம்மண் கடத்தலைத் தடுக்கக் கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு ... மேலும் பார்க்க

ராமதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை

மதுரையில் ரஜினி ரசிகா்கள் தாக்கப்பட்டது தொடா்பாக பாமக நிறுவனா் ராமதாஸ் மீது பதியப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. பாமக நிற... மேலும் பார்க்க

கஞ்சாவை கடத்திய தாய், மகள் கைது

மதுரை மாவட்டம், எழுமலை அருகே 24 கிலோ கஞ்சாவை கடத்தியதாக தாய், மகள் இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, அந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா். எழுமலை அருகே சட்டவிரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக எழுமலை ... மேலும் பார்க்க