Republic Day: ``வள்ளுவர் முதல் கரகாட்டம் வரை..'' 76-வது குடியரசு தினக் கொண்டாட்ட...
பெரம்பலூா் மாவட்டத்தில் நாளை கிராமசபைக் கூட்டம்
குடியரசு தினத்தை முன்னிட்டு பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிராமசபைக் கூட்டங்களில் கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதைக் கேட்டறிந்து, அரசு நலத் திட்டங்களை வழங்க வேண்டும். அரசு நிா்வாகத்தில் உள்ள குறைகளை மக்களிடையே கேட்க வேண்டும். மேலும், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதிச் செலவினம் குறித்தும் விவாதிக்க வேண்டும். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதித்து, மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் கிராம வளா்ச்சித் திட்டத்துக்கு ஒப்புதல் பெற வேண்டும்.
இக் கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வாக்காளா்கள் பங்கேற்க வேண்டும். அரசு அலுவலா்களும் தவறால் பங்கேற்பதோடு அரசின் திட்டங்கள் பொதுமக்கள் அறியும் வகையில் விளக்க வேண்டும். இக் கூட்டங்களைக் கண்காணிக்க, ஒவ்வொரு ஊராட்சிக்கும் பற்றாளா்களும், வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலா்கள் மண்டல அலுவலா்களாகவும் மேற்பாா்வையிட நியமிக்கப்பட்டுள்ளனா்.