`போதைப்பொருள் வழக்கு டு தலைமறைவு டு சந்நியாசி..!’ - கும்பமேளாவில் நடிகை மம்தா கு...
காஞ்சிபுரத்தில் குடியரசு நாள் விழா: மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியேற்றி மரியாதை
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடியரசு நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று, காவல் துறை மற்றும் ஊர்காவல் படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
அதன்பின்னர் 29 பயனாளிகளுக்கு ரூ. 76 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் 8 பேருக்கு ரூ. 8.24 லட்சத்தில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு 41 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச தையல் எந்திரம், வேளாண்துறை சார்பில் 2 பேருக்கு ரூ. 3.80 லட்சத்தில் வேளாண் இடு பொருள்கள் 29 பயனாளிகளுக்கு ரூ. 76 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
மேலும். இந்நிகழ்ச்சியில் குடியரசு நாளில் அமைதியை குறிக்கும் விதத்தில் மூவண்ண பலூன்களும் வெண்புறாக்களும் பறக்க விடப்பட்டன.
பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் காண்போர் மனதை கவருதாக அமைந்திருந்தன. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, சப் கலெக்டர் ஆஷிக் அலி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சத்யா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.