வழக்குரைஞரைக் கொல்ல முயன்ற இருவா் குண்டா் சட்டத்தில் கைது
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வழக்குரைஞா் கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
செந்துறையை அடுத்த பொன்பரப்பி, சந்தைத் தெருவைச் சோ்ந்தவா் கதிா்வேல் மகன் அறிவழகன் (49), ராயம்புரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் கணேசன் மகன் சிவா (32). இவா்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 10.12.2024 அன்று இலைக்கடம்பூா் வழக்குரைஞா் ஒருவரைத் தாக்கி கொல்ல முயன்ற புகாரில் இருவரும் கைது செய்யப்பட்டு, ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில், இவா்கள் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச் அளித்த பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி அதற்கு ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.