செய்திகள் :

அதானி வில்மர் லாபம் இரு மடங்காக அதிகரிப்பு!

post image

புதுதில்லி: அதானி வில்மர் நிறுவனத்தின் நிகர லாபம், 2024 - 25 ஆம் நிதியாண்டில், இரண்டு மடங்கு அதிகரித்து, ரூ.410.93 கோடி ஆக உள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.200.89 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.12,887.21 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.16,926 கோடியானது.

சமையல் எண்ணெய் பிரிவின் வருவாய் ரூ.9,710.82 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.13,386.71 கோடியானது. அதே வேளையில் உணவு மற்றும் எஃப்எம்சிஜி பிரிவின் வருவாய் ரூ.1,273 கோடியிலிருந்து ரூ.1,558 கோடியாகவும், தொழில்துறை அத்தியாவசிய வருவாய் ரூ.1,844.12 கோடியிலிருந்து ரூ.1,914.59 கோடியாகவும், செலவினம் ரூ.12,606.26 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.16,379.76 கோடியானது.

இது குறித்து அதானி வில்மர் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அங்ஷு மாலிக் கூறியதாவது:

நிறுவனம் கடந்த ஐந்து காலாண்டுகளாக வலுவான லாபத்தை பதிவு செய்து வருகிறது. அதே வேளையில் வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடனளிப்புக்கு முன் வருவாய் ரூ.792 கோடியாகவும் மற்றும் வரிக்கு பிந்தைய லாபம் ரூ 411 கோடியாக உள்ளது.

கடந்த பன்னிரண்டு மாதங்களாக இ-காமர்ஸ் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 41 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. மூன்றாவது காலாண்டில் பிராண்டட் தயாரிப்புகளில் ஆண்டுக்கு ஆண்டு 15 சதவிகிதம் வளர்ச்சியுடன், தென்னகத்தில் நிறுவனம் வலுவான அடியெடுத்து வைத்துள்ளது.

நிறுவனத்தின் பங்குகள் பிஎஸ்இ-யில் ரூ.5.06 சதவிகிதம் உயர்ந்து ரூ.264.60 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.

இதையும் படிக்க: கனரா வங்கியின் லாபம் 12% உயர்வு!

எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் லாபம் 22 சதவிகிதம் சரிவு!

புதுதில்லி: பேட்டரி உற்பத்தியாளரான எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் டிசம்பர் 31, 2024 உடன் முடிவடைந்த 3 வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 22 சதவிகிதம் சரிந்து ரூ.158 கோடியாக உள்ளது.கடந்த ஆண்டு இதே காலாண... மேலும் பார்க்க

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நிகர லாபம் 20% அதிகரிப்பு!

புதுதில்லி: விற்பனை அதிகரித்ததன் காரணமாக, டிசம்பர் மாத காலாண்டில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 20 சதவிகிதம் உயர்ந்து ரூ.609.35 கோடியாக உள்ளது.கடந்த நிதியாண்டு இதே காலாண்டில், ... மேலும் பார்க்க

பெல் நிறுவனத்தின் லாபம் இரு மடங்காக அதிகரிப்பு!

புதுதில்லி: பொதுத்துறை நிறுவனமான, 'பெல்' நிறுவனத்தின் நிகர லாபம், 2024 - 25 ஆம் நிதியாண்டு, இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.134.70 கோடி ஆக உள்ளது. டிசம்பர் 31, 2023 உடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின்... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் சரிந்து ரூ.86.56-ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கட்டண அச்சுறுத்தல்கள் தணிந்ததால், இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 25 காசுகள் சரிந்து ரூ.86.56 ஆக முடிந்தது.தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் மற... மேலும் பார்க்க

மீண்டெழுந்த சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை அறிவித்த நிலையில் வங்கி, ஆட்டோ மற்றும் ரியாலிட்டி பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் கொள்முதல் செய்ததன் காரணமாக இன்று ஈக்விட்டி பெஞ்ச... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு!

பங்குச்சந்தை இன்று(ஜன. 28) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 75,659.00 என்ற புள்ளிகளில் தொடங்கியது. பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றமடைந்து வரும் நில... மேலும் பார்க்க