கிளாம்பாக்கம் சிறுமி வல்லுறவு: ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் கைது!
நாடு முழுவதும் பொது சிவில் சட்ட அமலுக்கு வாய்ப்பில்லை: கா்நாடக துணை முதல்வா்
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வாய்ப்பில்லை என கா்நாடகத் துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் தெரிவித்தாா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய பாரத சாரண, சாரணியா் இயக்க வைர விழா மற்றும் கலைஞா் நூற்றாண்டு விழாவில் அவா் பேசுகையில், இந்நிகழ்வுக்கு நான் பள்ளிக் கால சாரணா் என்ற முறையிலேயே வந்துள்ளேன்.
தமிழகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க முன்னாள் முதல்வா் கருணாநிதியின் தொலைநோக்குத் திட்டங்களே காரணம். அவரது நூற்றாண்டு விழாவில் சாரணா் வைர விழாவும் சோ்ந்து தமிழகத்தில் நடப்பது பெருமைக்குரியது. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், பொது சிவில் சட்டத்தை தேசம் முழுவதற்கும் அமல்படுத்த வாய்ப்பில்லை என்றாா் அவா்.