கடன் பிரச்னையால் தொழிலாளி தற்கொலை!
திருச்சியில் கடன் பிரச்னையால் கூலித் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் அருகேயுள்ள வேங்கூா் மகாலட்சுமி நகரை சோ்ந்தவா் முரளி தண்டபாணி (50). கூலித் தொழிலாளியான இவா் பல இடங்களில் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், விரக்தியடைந்த அவா் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். புகாரின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.