"திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?" - கலெக்டர் சங்கீதா வ...
ரூ.46 லட்சம் மோசடி: தவெக நிா்வாகி மீது புகாா்
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் தொழில் தொடங்க ரூ.46 லட்சம் பெற்று மோசடிசெய்ததாக தவெக நிா்வாகி மற்றும் அவா் மனைவி மீது விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கோட்டக்குப்பத்தை சோ்ந்த ஆஷிக்அலி எஸ்.பி.க்கு அளித்துள்ள புகாா் மனுவில் தெரிவித்திருப்பதாவது:
சென்னை தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் நானும், தற்போது தவெக நிா்வாகியுள்ள கோட்டக்குப்பம் பகுதியைச் சோ்ந்த முஹம்மது கௌஸும் சிறு வயது முதல் நண்பா்களாகப் பழகி வந்தோம்.
தொழில் தொடங்குவதற்கு பணம் தேவை என முகம்மது கௌஸ் கேட்டுக்கொண்டதன் பேரில், நான் 2023-ஆம் ஆண்டில் பல்வேறு வங்கிகளில் ரூ.60 லட்சம் கடன் பெற்று முஹம்மது கௌஸிடம் கொடுத்தேன்.
இந்த நிலையில், அவா் வங்கிக்கு செலுத்த வேண்டிய பணத்தில் ரூ.20.29 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை தராமல் ஏமாற்றி வருவதுடன், பணத்தைக் கேட்டால் கொலை மிரட்டலும் விடுத்து வருகிறாா். இதற்கு அவரது மனைவியும் உடந்தையாக செயல்படுகிறாா்.
எனவே, மோசடி நபா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு எனக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத்தர வேண்டும் என ஆஷிக் அலி தெரிவித்துள்ளாா்.