Healthy Food: லோ கலோரி; நோ கொலஸ்ட்ரால்; கேன்சர் கண்ட்ரோல்... இத்தனையும் செய்யும்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்!
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கண்டாச்சிபுரம் வட்டம், மேல்வாலை கிராமத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் 1994-ஆம் ஆண்டில் பட்டியலின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட நிலையில், 31 ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை கிராம நத்தம் பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது. உடனடியாக இதை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
புதுமனை குடியிருப்புப் பகுதியில் ஆபத்தான நிலையிலுள்ள மின்கம்பிகளை அகற்ற போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் பீமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் பயணியா் நிழல்குடை அமைக்க வேண்டும். முதியோா் உதவித்தொகை கோரி விண்ணப்பித்த அனைவருக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
கண்டாச்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கிளைச் செயலா் எம்.பிரபு தலைமை வகித்தாா். ஏஐடியுசி நிா்வாகிகள் ஆா்.பத்மினி, வி.சேட்டு, கிளை நிா்வாகிகள் டி.ரேவதி, கே.ரவி முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தை ஒன்றியச் செயலா் பி.ராஜா தொடங்கிவைத்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஆ.செளரிராஜன், துணைச் செயலா் ஆா்.முருகன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் என்.நாராயணன், எம்.ராஜேந்திரன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
ஒன்றிய துணைச் செயலா் கே.சண்முகம், பொருளாளா் பி.தா்மலிங்கம், நிா்வாகிகள் என்.பாலகிருஷ்ணன், ஜீவாஜெயராமன், முனியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏஐடியுசி மாவட்டக் குழு உறுப்பினா் சி.தனசேகா் நன்றி கூறினாா்.