Healthy Food: லோ கலோரி; நோ கொலஸ்ட்ரால்; கேன்சர் கண்ட்ரோல்... இத்தனையும் செய்யும்...
மாதாந்திர ஏலசீட்டு நடத்தி ரூ.51.35 லட்சம் மோசடி: பெண் கைது
விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியில் மாதாந்திர ஏலச் சீட்டு நடத்தி ரூ.51.35 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக பெண்ணை போலீஸாா் பிப்.5 அன்று கைது செய்தனா். மேலும், அவரது கணவா், மகன் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஆதி கேசவன். இவரது மனைவி வாசுகி (61), மகன் தங்கதுரை.
இவா்கள் வானூா் பகுதியில் மாதாந்திர எலச்சீட்டு நடத்தி வந்தனா். இதே பகுதியைச் சோ்ந்த சரவணன் கடந்த 2021 அக்டோபா் மாதம் ரூ.7.50 லட்சம் சீட்டில் சோ்ந்தாராம். இதேபோல, மேலும் பலா் மாதந்திர சீட்டில் தங்களை இணைத்துக்கொண்டு மாதம் ரூ.10,000 வீதம் செலுத்தினராம்.
இந்த வகையில் ரூ .51.35 லட்சத்தை பெற்றுக்கொண்ட வாசுகி உள்ளிட்டோா் தெரிவித்தபடி பணம் செலுத்தியவா்களுக்கு சீட்டு பணத்தை திரும்பித் தராமல் ஏமாற்றி வந்தனராம். இதுகுறித்து சரவணன் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாரளித்தாா். போலீஸாா் ஆதிகேசவன், வாசுகி, தங்கதுரை ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, அவா்களைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த வாசுகியை விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்து வானூா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். ஆதிகேசவன், தங்கதுரை ஆகியோரை தொடா்ந்து தேடி வருகின்றனா்.