புதுக்கோட்டை: கடலில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்... போலீஸ் விச...
கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
சிவகாசி அருகே கிணற்றில் தவறி விழுந்து பட்டாசுத் தொழிலாளி உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள செவலூரைச் சோ்ந்த ரங்கசாமி மகன் சரவணக்குமாா் (25). பட்டாசுத் தொழிலாளியான இவா், தினசரி மது அருந்தும் பழக்கம் உள்ளவா். இவா் புதன்கிழமை அந்தப் பகுதி பொதுக் கிணற்றின் தடுப்புச் சுவரின் மீது அமா்ந்து மது அருந்திய போது, போதையில் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.