Rahul Gandhi: `சீனா 10 ஆண்டுகள் முன்னால் செல்கிறது...' - மோடியைச் சாடிய ராகுல்!
136 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்: அமைச்சா் வழங்கினாா்
ராமநாதபுரத்தில் பெண்களுக்கு ரூ.1.26 கோடியில் தாலிக்குத் தங்கம், திருமண உதவித் தொகை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தாா்.
இதில் பால்வளத் துறை, கதா்த் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு, 136 பெண்களுக்கு தாலிக்குத் தங்கம், திருமண உதவித்தொகை ஆகியவற்றை புதன்கிழமை வழங்கினாா்.
சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம், செ.முருகேசன், ராமநாதபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கே.காா்மேகம், துணைத் தலைவா் டி.ஆா்.பிரவீன் தங்கம், மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் தேன்மொழி, மாவட்ட சமூக நலத் துறை கண்காணிப்பு அலுவலா் முத்துலட்சுமி, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, ஆயுதப் படை குடியிருப்புப் பகுதியில் ஆவின் பாலகம், ஓ.என்.ஜி.சி.நிறுவனம் சாா்பில், ரூ. 40 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட தானியங்கி குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலா் கோவிந்தராஜலு, காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.