போலி கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயன்றவா் கைது
போலி கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயன்ற பயணியை திருச்சி விமான நிலைய போலீஸாா் பிப்.4 அன்று கைது செய்தனா்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை மலேசியா செல்ல வந்த மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள திருமங்கலம் பகுதி பழனிக்குமாா் (46), தனது கடவுச்சீட்டில் பெயா் உள்ளிட்ட விவரங்களை போலி ஆவணங்கள் மூலம் மாற்றியிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பழனிகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனா்.