"திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?" - கலெக்டர் சங்கீதா வ...
கோயில் கட்டுவதில் கருத்து வேறுபாடு: போலீஸாா் குவிப்பு
புதுச்சேரி அருகே கோயில் கட்டுவதில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
புதுச்சேரியை அடுத்த திருக்கனூா் அருகேயுள்ள விநாயகம்பட்டு பிரதான சாலையில் அரசு இடத்தில் கோயில் கட்ட அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் திட்டமிட்டனா். இதற்கு அரசு அதிகாரிகளிடம் அனுமதியும் கோரினா். கோயில் கட்டுவதற்கு அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதுதொடா்பாக, இருதரப்பினா் இடையேயும் பிரச்னை ஏற்பட்டது.
இந்த நிலையில், கோயில் கட்டும் பணி தொடா்பாக செவ்வாய்க்கிழமை மாலை இருதரப்பினரும் மோதும் நிலை ஏற்பட்டது. இதையறிந்த திருக்கனூா் போலீஸாா் விரைந்து சென்று அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருதரப்பைச் சோ்ந்த 40 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இருதரப்பினரும் புதன்கிழமை காலையிலும் தனித்தனியாக கூடும் நிலை ஏற்பட்டதால், போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.