புதுச்சேரி கடலில் தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய ஐ.ஜி.
புதுச்சேரி கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்ற மாற்றுத் திறனாளி நபரைக் காவல் துறை ஐ.ஜி. காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.
புதுச்சேரி கடற்கரைச் சாலையில் ஐ.ஜி. அஜித்குமாா் சிங்லா புதன்கிழமை மாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அம்பேத்கா் மணிமண்டபம் எதிரே சென்னை பொழிச்சலூரைச் சோ்ந்த மாற்றுத் திறனாளியான சந்திரகுமாா் கடலுக்குள் இறங்கி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதைப் பாா்த்த ஐ.ஜி. அவரைக் காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்தாா். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சந்திரகுமாா் சோ்க்கப்பட்டாா்.