வன்கொடுமையால் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிதியுதவி
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு புதுவை அரசு சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
கடலூா் மாவட்டம், வேள்ளப்பாக்கத்தைச் சோ்ந்தவா் முத்து. இவா் அண்மையில் புதுச்சேரியை அடுத்த பாகூரில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். அவரது குடும்பத்தினருக்கு புதுவை அரசின் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் ரூ.4.42 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
புதுச்சேரியில் சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முத்துவின் மனைவி விகிதாவிடம் காசோலையை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா். பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், இயக்குநா் இளங்கோவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.