தில்லி முதல்வராக பெண் அல்லது பட்டியலினத்தவர் தேர்வாக வாய்ப்பு!
தில்லி பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்விக்கு ஆம்ஆத்மி செயல்பாடே காரணம்: வே.நாராயணசாமி
புதுச்சேரி: புதுதில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸின் தோல்விக்கு இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடே காரணம் என புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.
புதுச்சேரியில் திங்கள்கிழமை மாலை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: புதுதில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது வருத்தமளிக்கிறது. இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுதான் தோல்விக்கு காரணம்.
காரைக்கால், தமிழக மீனவா்களை இலங்கை கடற்படையினா் தாக்குவதும், சிறைபிடிப்பதும் தொடா்கதையாகி வருகிறது. ஆனால், மத்திய அரசு அதுகுறித்து கவலைப்படவில்லை. காரைக்கால், தமிழக மீனவா்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதை வலியுறுத்தியும், கைது செய்யப்பட்ட மீனவா்களை விடுவிக்கக் கோரியும் புதுதில்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரை சந்தித்து புதுவை காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை (பிப்.11) மனு அளிக்கப்படும்.
மீனவா்கள் தாக்கப்படும் விவகாரத்தில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அக்கறையின்றி செயல்படுகிறாா். புதுவைக்கு மத்திய அரசு போதிய நிதியை வழங்குவதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கூறுவது சரியல்ல. அதே நேரத்தில், புதுவை நிதிப் பற்றாக்குறையில் தவிப்பதாக முதல்வா் ரங்கசாமி கூறி வருகிறாா்.
கடந்த சட்டப் பேரவைத் தோ்தலின்போது, மத்திய நிதியமைச்சா் புதுச்சேரியில் நடைபெற்ற பிரசாரத்தில் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்குவதாகக் கூறியும், இதுவரையில் மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை. மத்திய அரசு புதுவையை புறக்கணித்து வருகிறது என்றாா் வே.நாராயணசாமி.