தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே தோன்றும் இந்திய தீவு - எங்கே நிகழ்கிறது இந்த அதிசயம்?!
கொங்கண் கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும் சீகல் தீவு, தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே தோன்றும் ஒரு தனித்துவ தீவாக அடையாளம் பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்திலுள்ள தேவ்பாக் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள சீகல் தீவு, இயற்கை ஆர்வலர்கள், சாகச பிரியர்கள், சுற்றுலா பயணிகள் என அனைவரையும் ஈர்த்து வருகிறது.
இந்த சீகல் தீவு தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே கடலில் இருந்து வெளிப்படுகிறது. கடல் அலை குறையும்போது அழகிய மணல் திட்டு தோன்றும். இதனைத்தான் சீகல் தீவு என்று அழைக்கின்றனர். சீகல் என்பது கடலில் வாழும் ஒரு பறவை இனம் ஆகும். ஏராளமான சீகல்கள் இங்கு கூடுவதால் இந்த தீவு இந்தப் பெயரைப் பெற்றுள்ளது.
இது பார்வையாளர்களுக்கு சொர்க்கமாக அமைகிறது. அதற்கு முக்கிய காரணம், இந்த தீவில் இருக்கும் அழகிய, அமைதியான சுற்றுப்புறங்கள்தான். இங்கு வரும் பார்வையாளர்கள் இந்தக் கடலை வெறுமனே என்று ரசிப்பது மட்டுமல்லாமல்... மீன் பிடித்தல் போன்ற செயல்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர்.
இந்த ஹிடன் ஜெம் ஸ்பாட்டை, பயணிகள் சாலை வழியாகவோ அல்லது கொங்கண் ரயில் வழியாகவோ அடையலாம். மால்வான் நகரத்திலிருந்து பார்வையாளர்கள் தேவ்பாக் கடற்கரைக்கு படகு சவாரி செய்யலாம். உள்ளூர் மீனவர்கள் இந்த படகு சவாரிக்கு ரூ. 500-800 வரையிலான கட்டணம் வசூலிக்கின்றனர்.
சீகல் தீவு குறைந்த அலையின்போது மட்டுமே அணுகக்கூடியதாக இருப்பதால், முன்கூட்டியே அந்த இடம் குறித்து சரிபார்ப்பது அவசியம். சரியான நேரம் தினமும் மாறுபடும், எனவே உள்ளூர்வாசிகளிடம் ஆலோசித்து தீவுக்குள் காலடி எடுத்து வைக்கும் அரிய வாய்ப்பைத் தவறவிடாமல் இருக்க பார்வையாளர்கள் அதற்கேற்ப திட்டமிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.