செய்திகள் :

இரண்டு பாகமாக உருவாகும் கார்த்தி - 29?

post image

நடிகர் கார்த்தி நடிக்கும் அவரது 29-வது படம் இரண்டு பாகங்களாக தயாராக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் வா வாத்தியார் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இப்படத்தின் வெளியீடு தாமதமாகி வருகிறது. தற்போது, இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் - 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையே, டாணாக்காரன் படத்தின் மூலம் பேசப்பட்ட இயக்குநர் தமிழ், கார்த்தியின் 29-வது படத்தை இயக்கவுள்ளதாக ட்ரிம் வாரியர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: சச்சின் மறுவெளியீட்டு போஸ்டர்!

இப்படத்தின் கதை 1960-ல் ராமேஸ்வரத்திலிருந்த கேங்ஸ்டர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கையைத் தொட்டு இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக இது உருவாகும் எனத் தெரிகிறது. நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கார்த்தி - 29 படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிறந்தநாள் வாழ்த்துகள் டிரைலர்!

தேசிய விருதுவென்ற நடிகர் அப்புக்குட்டி நடிப்பில் உருவாகியுள்ள பிறந்தநாள் வாழ்த்துகள் பட டிரைலர் வெளியாகியுள்ளது.ரோஜி மேத்திவ், ராஜூ சந்திரா தயாரிப்பில் ராஜூ சந்திரா எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தி... மேலும் பார்க்க

அகத்தியா டிரைலர்!

நடிகர்கள் ஜீவா, அர்ஜுன் நடிப்பில் உருவாகும் அகத்தியா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் அர்ஜுன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் படத்தி... மேலும் பார்க்க

18 நாள்களில் 36 கதாபாத்திரங்கள் அறிமுகம்..! எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள எம்புரான் படத்தின் 36 கதாபாத்திரங்கள் தினமும் இரண்டிரண்டாக அறிமுகமாகி வருகின்றன.நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃ... மேலும் பார்க்க

ரெட்ரோ முதல் பாடல் தேதி!

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் முதல் பாடல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ.ஆக்சன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில்... மேலும் பார்க்க

வா வாத்தியார் என்ன ஆனது?

நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார் படம் வெளியீட்டிற்குத் தாமதமாகி வருகிறது.கார்த்தி நடிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களிடம் கவனம் பெற்று வெற்றிப்படமானது. காதல், ஆக்சன் இல்லாமல் இரு ஆண்கள... மேலும் பார்க்க

பிரதமருக்கு நன்றி தெரிவித்த தீபிகா படுகோன்..! காரணம் என்ன?

பிரதமர் மோடிக்கு மன நலம் குறித்த விவாதங்களுக்காக நடிகை தீபிகா படுகோன் நன்றி தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளார். பரிக்ஷா பே சர்ச்சா(தேர்வுகள் குறித்த கலந்துரையாடல்) என்பது ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி ... மேலும் பார்க்க