செய்திகள் :

டெல்லி: பெண் அல்லது பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து முதல்வர் - ரேஸில் யார் யார்?

post image

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த 5-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் எனத் தேர்தல் களம் பரபரத்தது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு 70 சட்டமன்றத் தொகுதியில் 48 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்கிறது பா.ஜ.க. 22 இடங்களில் மட்டுமே வென்று தனது 10 ஆண்டுகால ஆட்சியை இழந்திருக்கிறது ஆம் ஆத்மி. இந்த நிலையில், 'டெல்லி முதல்வர் யார்' என பா.ஜ.க தலைமை தீவிரமாக விவாதித்து வருகிறது. இந்த முறை, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களில் ஒரு பெண்ணை முதல்வராக தேர்வு செய்யக் கூடும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

மோடி
மோடி

சமூகப் பிரதிநிதித்துவ பின்னணியைச் சேர்ந்த துணை முதல்வரை உறுதி செய்யவும் வாய்ப்பிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், புதிய அமைச்சரவையில் பெண்கள், பிற்படுத்தப்பட்ட தலைவர்களின் பிரநிதித்துவம் அதிகம் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் ரீதியாக சிறப்பாகச் செயல்படுகிற, பெரும் சமூகப் பின்னணியைக் கொண்ட சீக்கியத் தலைவர் அல்லது பெண்ணை முதல்வராக பரிசீலிப்பது குறித்து கட்சி கவனமாக ஆலோசித்து வருகிறது என பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பா.ஜ.க மகளிர் பிரிவின் தேசிய துணைத் தலைவரும், ஷாலிமார் பாக் எம்.எல்.ஏவுமான ரேகா குப்தா, கிரேட்டர் கைலாஷில் வென்ற ஷிகா ராய், வஜீர்பூர் எம்.எல்.ஏ பூனம் சர்மா, நஜாப்கர் எம்.எல்.ஏ நீலம் பெஹல்வான், முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, முன்னாள் எம்.எல்.ஏ சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ் ஆகியோர் முதல்வர் பதவிக்கான ரேஸில் இருக்கின்றனர் என்கிறது டெல்லி வட்டாரம்.

அமித் ஷா. மோடி

ஆண்களில், ரோஹிணி எம்.எல்.ஏ விஜேந்தர் குப்த , கோண்டா எம்.எல்.ஏ அஜய் மகாவர், லட்சுமி நகர் எம்.எல்.ஏ அபய் வர்மா ஆகியோரும் களத்தில் நிற்கின்றனர். பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் முடிவடைந்ததும், டெல்லி முதல்வர் பதவியேற்பு விழாவை ஒரு பிரமாண்டமான நிகழ்வாகத் திட்டமிட்டுள்ளது பா.ஜ.க. அந்த விழாவில் என்.டி.ஏ கூட்டணி ஆளும் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: "கலவர வழக்கில் மாணவியின் தாயாரையே குற்றவாளியாக்குவதா?" - CPI(M) கண்டனம்

கள்ளக்குறிச்சியில் 2022, ஜூலை 13-ம் தேதியன்று, கனியாமூர் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில், மாணவி தற்கொலை செய்துகொண்... மேலும் பார்க்க

வேலூர்: விஐடி அருகில் குண்டும் குழியுமான சாலை... மக்களின் கோபமும் மாநகராட்சியின் விளக்கமும் என்ன?

வேலூர் மாவட்டத்தில் காட்பாடி பகுதியில் விஐடி பல்கலைக்கழகத்தின் மெயின் பிளாக் கட்டடங்கள் அமைந்துள்ளன. இந்த மெயின் பிளாக் கட்டடத்தின் அருகிலேயே இருக்கும் அரசு உள் விளையாட்டு மைதானத்திற்குச் செல்லும் சால... மேலும் பார்க்க

Sanskrit: `இது பாரதம்... சமஸ்கிருதம்தான் முதன்மை மொழி’ - மக்களவையில் சபாநாயகர் vs தயாநிதி மாறன்

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில், நடைபெற்ற கூட்டத்தில் கேள்வி பதில் நேரத்தின்போது தி.மு.க எம்.பி தயாநிதி மாறனுக்கும், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் மக்களவையில் இன்று காரசார விவாதம் அரங்கே... மேலும் பார்க்க

`அந்த 2 சர்வேக்கள்; திராவிட கட்சிகளின் வாக்குவங்கி’ - பி.கே, விஜய் சந்திப்பும், வியூக பின்னணியும்

விஜய் - பிரசாந்த் கிஷோர்தமிழக அரசியலின் ஒட்டுமொத்த பார்வையும் பனையூரில் குவிந்திருக்கும் அளவுக்கு மாறிப்போயிருக்கிறது, தவெக தலைவர் விஜய் - ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் இடையேயான சந்திப்... மேலும் பார்க்க