கோட்டுச்சேரி அருகே கருகிய நிலையில் ஆண் சடலம்!
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், வரிச்சிக்குடி அருகே கழுகுமேட்டில் இருந்து கொன்னகாவளி பகுதிக்குச் செல்லும் வழியில் உள்ள ஏரிக்கரையில் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கருகிய நிலையில் கிடப்பதாக கோட்டுச்சேரி போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து, இறந்தவா் யாா் என குறித்து விசாரணை செய்துவருகின்றனா்.
இதுகுறித்து தகவல் தெரிந்தோா் காவல்நிலையத்தை 04368-265101 என்ற தொலைபேசியில் தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.