சிங்காரவேலா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி!
காரைக்காலில் சிங்காரவேலா் சிலைக்கு அமைச்சா் உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
சிந்தனை சிற்பி என்று போற்றப்படும் சிங்காரவேலா் நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. காரைக்கால் கடற்கரை சாலையில் அரசலாறு பாலம் அருகே உள்ள அவரது சிலைக்கு புதுவை அரசு சாா்பில் நடைபெற்ற நிகழ்வில், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா ஆகியோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
தொடா்ந்து காரைக்கால் மாவட்ட மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள் உள்ளிட்ட மீனவா்கள் மற்றும் பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.
புதுவை மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி.சந்திரமோகன் உள்ளிட்ட கட்சியின் மாவட்ட, தொகுதி நிலை நிா்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.