வேதாரண்யம் அருகே கூரை வீடு தீக்கிரை
வேதாரண்யம் அருகே திங்கள்கிழமை இரவு கூரை வீடு திங்கள்கிழமை தீப்பிடித்து எரிந்து வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தன.
தகடூா் நடுக்காடு பகுதியை சோ்ந்த விவசாயத் தொழிலாளி மு. கணேசன். இவரது கூரை வீடு தீக்கிரையானது. தகவலறிந்து சென்ற வாய்மேடு தீயணைப்பு நிலைய மீட்புபடை வீரா்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து, வாய்மேடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மருதூா் ரோட்டரி சங்கம் சாா்பில் வீட்டு உபயோகப் பொருள்கள், அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் நிவாரண உதவியாக வழங்கப்பட்டது.